MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • AIADMK: ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்! அமமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கியதால் அதிர்ச்சி! அவர் யார் தெரியுமா?

AIADMK: ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்! அமமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கியதால் அதிர்ச்சி! அவர் யார் தெரியுமா?

 டிடிவி தினகரன் அறிக்கை அரசியல் மட்டுமே செய்வதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைவதாக சிவபிரசாத் தெரிவித்தார்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 06 2024, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிளவுபட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

25

இந்நிலையில்  உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற மற்றும் நாளுடாளுமன்ற தேர்தலில் அமமுக எதிர்பார்த்த வெற்றியை பெற்றாமல் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சியல் இருந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

35

இந்நிலையில், அமமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் யார் என்பதை பார்ப்போம்.

45

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளராக இருந்தவர் சிவ பிரசாத். இவர் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். இந்நிலையில், அமமுக மாவட்ட செயலாளராக இருந்த சிவ பிரசாத், அக்கட்சியிலிருந்து விலகி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி  இல்லத்தில், அவர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன்,  மாவட்ட துணைச்செயலாளர் சம்பத் குமார், ஒரு ஒன்றிய செயலாளர், இரண்டு பகுதி செயலாளர்கள், ஏழு வட்ட செயலாளர்கள், மற்றும் பல்வேறு அணி செயலாளர்களும் உடன் இணைந்தனர்.

55

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ பிரசாத்:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை அரசியல் மட்டுமே செய்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி களத்தில் எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுவதால் தங்களை தாய் கழகமான அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிடிவி தினகரன்
அதிமுக
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved