- Home
- Tamil Nadu News
- எங்களை விட்டு போகாதீங்கனு எவ்வளவோ கெஞ்சினோம்.! ஓபிஎஸ் தொகுதியில் புகுந்து கெத்து காட்டிய இபிஎஸ்
எங்களை விட்டு போகாதீங்கனு எவ்வளவோ கெஞ்சினோம்.! ஓபிஎஸ் தொகுதியில் புகுந்து கெத்து காட்டிய இபிஎஸ்
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுகவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்தார். அதிமுகவை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது என்று சூளுரைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், இங்கே தேனி மாவட்டத்தில் நடைபெறுகிற பிறந்தநாள் கூட்டம் மாநாடு போல் உங்கள் காட்சியளிக்கிறது.இதைப் பார்த்தால் பல பேருக்கு எரிச்சல்தான் வரும். இந்த மக்கள் பாசமிகு மக்கள். இந்த மண் தெய்வீக மண். இரு தலைவர்கள் இங்கே நின்று முதலமைச்சராக வெற்றி பெற வைத்த மாவட்டம்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை
பெண்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அச்சத்துடன் அனுப்பும் நிலை உள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை இந்த ஸ்டாலின் அவர்கள். இப்போது அப்பா அப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொண்டிருக்கும்போது அப்பா அப்பா என்று கதறிக் கொண்டிருக்கும்போது இந்த ஸ்டாலின் எங்கே போனார். எவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் முடிவுக்கு கொண்டு வருகிற காலம் வெகு சீக்கிரத்தில் வரும் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என தெரிவித்தார்.
அதிமுக மூழ்கும் கப்பல்
எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல்.வேறு யாரும் ஏற மாட்டார்கள் என்று இங்கே இருக்கும் ஒருவர் தெரிவித்திருக்கிறார். நான் சில தகவல்களை கூறுகிறேன் எது சரி?எது தவறு ? என்று நீங்களே முடிவு செய்யுங்கள். அம்மா அவர்கள் மறைவுக்குப் பின் இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று தர்மயுத்தம் என்று தொடங்கினார்.
இவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் செல்வார். பெரும்பான்மை ஆதரவுடன் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது.அப்போது அண்ணா திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் திமுக தீர்மானம் கொண்டு வந்த போது, அம்மா அவர்களின் அரசுக்கு எதிராக ஓட்டு போட்ட மனிதர் இந்த மனிதர். அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு திமுகவிற்கு துணை நின்றவர் இந்த மண்ணிலே பிறந்தவர்.
நானா துரோகம் செய்தேன் ?
நானா துரோகம் செய்தேன்.அதற்கும் மேலாக இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தொடர்ந்து பணிகளை செய்தவர். இரண்டு கோடி அண்ணா திமுக தொண்டர்களின் சொத்து தலைமை கழகக் அலுவலகம்.அந்த சொத்தை ரவுடிகளை கொண்டு சென்று அடித்து நொறுக்கி, திமுக உதவியுடன் சீல் வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். இது துரோகம் இல்லையா? எங்களை விட்டு போகாதீர்கள் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டோம்.
நீங்களாக போனீர்கள். அம்மாவிற்கு விசுவாசம் விசுவாசம் என்று கூறிக்கொண்டு, 89ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நீங்கள் யாருக்கு வேலை செய்தீர்கள்? வெண்ணிறாடை நிர்மலாவுக்கு வேலை செய்தார். இவரா அம்மாவிற்கு விசுவாசமாக இருந்தவர்?அதே சேவல் சின்னத்தில் 89 ல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான்.
சீனியர் நான் தான்
நீங்கள் 2001 இதான் எம்எல்ஏ. நான் 89 லிலேயே நான் எம்எல்ஏ. உங்களைவிட 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் சட்டமன்ற உறுப்பினர்.நாடாளுமன்ற உறுப்பினர்,வாரியத் தலைவர் என பல பதவிகளை வகித்தவன். அவருக்கு பதவி இல்லையென்றால் கட்சியை பார்க்க மாட்டார்.அவரை மட்டும்தான் பார்த்துக் கொள்வார். 2001 ல் எனது தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
எனக்கு வேறு கொடுத்தார்கள்.ஆனால் நான் போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு வேலை செய்து வெற்றி பெற வைத்தேன். தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வதுதான் தொண்டனின் கடமை. அதனால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். துரோகம் செய்தவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிமுக கரை சேரும் கப்பல்
உழைக்கின்ற மக்களுக்கு கதவைத் தட்டி பதவி கொடுக்கின்ற ஒரே இயக்கம் அண்ணா திமுக மட்டுமே. இது மூழ்குகிற கப்பல் இல்லை. கரை சேருகிற கப்பல். இந்த கப்பலில் ஏறுகிறவர் பிழைத்துக் கொள்ளலாம். ஏறாதவர் நடுக்கடலில் சென்று விடுவார். நான் எந்த மேடையிலும் யாரையும் தவறாக பேசமாட்டேன்.
இவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதை விட்டுவிட்டு, அவருக்கு பதவி இல்லை என்ற காரணத்திற்காக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.கடவுள் இருக்கிறார். 2026 இல் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரும். இதே மேடைக்கு மீண்டும் நான் வருவேன்.கழகம் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.
2026தேர்தல் அதிமுக வெற்றி
ஒரு பயிர் செழித்து வளருகிற போது களைகள் முளைக்கும்.களைகள் முளைத்தால் பயிர் செழித்து வளராது.அதனால் விவசாயிகள் பயிர் செழித்து வளர்வதற்காக களை எடுப்பார்கள்.அண்ணா திமுக என்ற பயிர் செழித்து வளர்ந்து 2026ல் நல்ல அறுவடையைக் கொடுக்கும்.அதிமுக கட்சியில் மட்டும்தான் மேடைக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்களும்,
மேடைக்கு மேல் அமர்ந்திருப்பவர்களும் பதவிக்கு வர முடியும். இந்தியாவில் மற்ற எந்த கட்சித் தலைவரும் இப்படி சொல்வார்களா?. அண்ணா திமுகவில் நான் மட்டும் பொதுச் செயலாளர் அல்ல.அனைத்து தொண்டர்களும் பொதுச்செயலாளர் தான்.2026 இல் கழக வேட்பாளர்களை வெற்றிச் பெற செய்து இருவரும் தெய்வங்களின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபடுவோம்.