- Home
- Tamil Nadu News
- ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்., வங்கி கடன் ரத்து..! அறிவிப்புகளை அள்ளி வீசிய இபிஎஸ்..
ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்., வங்கி கடன் ரத்து..! அறிவிப்புகளை அள்ளி வீசிய இபிஎஸ்..
AIADMK Manifesto: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அஇஅதிமுக சார்பில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

வருடத்திற்கு 3 கேஸ் சிலிண்டர்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
வங்கி கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
முதியோருக்கு ரூ.2000 ஓய்வூதியம்
முதியோர் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டியில் படுகாயமடையும் வீரர்களின் சிகிச்சை தேவைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
கல்விக்கடன் ரத்து
மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

