MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் மற்றும் நெருங்கிய நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 06 2025, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Minister Senthil Balaji

Minister Senthil Balaji

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அமைச்சராக இருந்து வருகிறார். இவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததை அடுத்து அமலாக்கத்துறையால்  2023ம்  ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Senthil Balaji Case

Senthil Balaji Case

இதனிடையே அவ்வப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், நெருங்கிய நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்தாகிறதா? அமலாக்கத்துறை எடுத்த அதிரடி முடிவு!

34
Enforcement Directorate

Enforcement Directorate

அதாவது கொங்கு மெஸ் சுப்பிரமணி, சக்தி மெஸ் கார்த்திக் மற்றும் அரசு ஒப்பந்தாரர் எம்.சி.சங்கர் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் இன்று காலை முதல் கேரள மாநிலத்தை சேர்ந்த 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுட்டுள்ளனர். 

44
Enforcement Directorate Raid

Enforcement Directorate Raid

2023 ம் ஆண்டு ஏற்கனவே அங்கு சோதனை நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னையிலும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக அறியப்படும் நபர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமலாக்க இயக்குனரகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image3
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved