- Home
- Tamil Nadu News
- 3 முதல் 5 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ. 500... 6ஆம் வகுப்புக்கு ரூ.1000 - தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
3 முதல் 5 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ. 500... 6ஆம் வகுப்புக்கு ரூ.1000 - தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
தமிழக அரசு சிறுபான்மை நலத்துறை சார்பில், கிராமப்புற சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான காலை உணவை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி (6-10 வகுப்பு), வண்ணப் பென்சில்கள் (3-5 வகுப்பு), மற்றும் வண்ணக் கிரையான்கள்வழங்கப்படுகின்றன.
பள்ளி மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேர்ந்த பெண் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- பட்டப்படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை
இடைநிற்றலை குறைக்க, 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இது கல்வி தொடர்ச்சியை ஊக்குவிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்
தமிழ்நாடு அரசு, சிறுபான்மை நலத்துறை சார்பில், கிறாமப்புற சிறுபான்மை மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. கல்வி இடைநிறுத்தம் குறையும் வகையில், சிறுமிகள் பள்ளியில் தொடர்ந்து பயில ஊக்குவிக்கவும், பெற்றோர் பொருளாதார சுமையை குறைக்கவும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
3 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 500 ரூபாய்
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கிராமப்புறப் பெண் மாணவிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் போது, 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும். 6 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம், பெற்றோர் தங்கள் மகள்களை பள்ளியில் தொடரச்செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 2024-2025 கல்வியாண்டில் ரூ.149.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவிகள் பயன்பெறுவார்கள்.
6ஆம் வகுப்பிற்கு 1000 ரூபாய் உதவித்தொகை
மாணவிகளின் கல்வி இடைநிறுத்தம் தடையின்றி தொடர்வதற்கு இந்த ஊக்கத்தொகை பெரும் ஆதரவாக இருக்கும் எனவும், கல்வி மேம்பாட்டில் சிறுபான்மை சமூகத்தின் பங்குபற்றலை அதிகரிக்கும் எனவும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் சிறுபான்மை மகளிர் கல்வி வளர்ச்சிக்கு மாபெரும் ஊக்கமாக அமையும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், பெண் கல்வியை ஊக்குவிக்கும் தமிழக அரசின் புதிய முயற்சியாக, இந்த திட்டம் பல மாணவிகளுக்கு கல்வி கனவை நனவாக்கும் வாய்ப்பை அளிக்கிறது.