MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமைச்சர் நேருவை விடாது துரத்தும் ED..! லஞ்சப்புகாரில் நடவடிக்கை எடுக்க 3வது முறையாக கடிதம்

அமைச்சர் நேருவை விடாது துரத்தும் ED..! லஞ்சப்புகாரில் நடவடிக்கை எடுக்க 3வது முறையாக கடிதம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஏற்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி அமலாக்கத்துறை தரப்பில் தமிழக காவல் துறைக்கு மூன்றாவது முறையாக கடிதம் எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு.

2 Min read
Author : Velmurugan s
Published : Jan 20 2026, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நகராட்சி நிர்வாக துறையில் மெகா ஊழல்
Image Credit : F/KN Nehru

நகராட்சி நிர்வாக துறையில் மெகா ஊழல்

திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சகத்தில் புதிதாக பணி வழங்குதல் மற்றும் பணி மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.365 கோடிக்கும் மேல் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி தமிழக காவல்துறைக்கு மூன்றாவது முறையாக கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

24
3வது முறையாக கடிதம்
Image Credit : Asianet News

3வது முறையாக கடிதம்

இது தொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “அரசுப் பணி வழங்க லஞ்சம் – ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் – ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

Related Articles

Related image1
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!
Related image2
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
34
ரூ.1 கோடி வரை லஞ்சம்
Image Credit : x

ரூ.1 கோடி வரை லஞ்சம்

இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் சாதனைகள்.

அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள், ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

44
உறுதியான ஆதாரம் இருந்தும் நடவடிக்கை
Image Credit : Asianet News

உறுதியான ஆதாரம் இருந்தும் நடவடிக்கை

தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன. தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது.

உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணாமலை பாஜக
தமிழ்நாடு அரசு
திமுக
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
Recommended image2
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Recommended image3
Now Playing
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
Related Stories
Recommended image1
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!
Recommended image2
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved