MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School College Holiday: ஹாப்பி நியூஸ்! டிசம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

School College Holiday: ஹாப்பி நியூஸ்! டிசம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு டிசம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 06 2023, 07:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்நாளில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதையொட்டி டிசம்பர் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) நடைபெறுவதை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

33

மேலும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலகங்கள் ஆகியவை குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு சனிக்கிழமை திருச்சி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டும் என தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Recommended image2
Now Playing
"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
Recommended image3
Now Playing
3 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved