MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Diwali Holiday: நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்! ஆனால் ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு!

Diwali Holiday: நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்! ஆனால் ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு!

TN Government Holiday: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 19 2024, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Diwali Festivel

Diwali Festivel

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இடையில் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
School Student

School Student

அடுத்து 2ம் தேதி சனிக்கிழமையும், 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் உள்ளது. எனவே இடையில் உள்ள நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை கிடைக்குமா என பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் காத்து கிடந்தனர். அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கும் பட்சத்தில் தொடர்ந்து  4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். 

இதையும் படிங்க: TN Government Employees: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம்? எப்போது தெரியுமா?

36
Government Employee

Government Employee

எனவே கடந்த சில ஆண்டுகளாகவே  தமிழக அரசு தீபாவளிக்கு முந்தைய நாள் அல்லது அடுத்த நாள் அரசு பொது விடுமுறையாக அறிவித்து வருகிறது. எனவே நவம்பர் 1ம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

46
School Holiday

School Holiday

 தீபாவளி மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க:  TN School Teacher: இனி ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மீண்டும் வருகிறது!

56
Tamilnadu Government

Tamilnadu Government

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இந்த ஆண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள்,  பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 09ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

66
Four days Holiday

Four days Holiday

நவம்பர் 1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து தீபாவளி பண்டிகைக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு விடுமுறை
தீபாவளி பண்டிகை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!
Recommended image2
TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
Recommended image3
Bhagyaraj: திருமணமான 2 ஆண்டுகளில் உயிரிழந்த பாக்யராஜின் முதல் மனைவி யார்? பலரும் அறியாத சோக கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved