ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், காவல்துறை முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், வட சென்னையின் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மாலை சென்னை, பெரம்பூர் அருகே உள்ள புதிய வீட்டின் கட்டுமான பணியை ஆம்ஸ்ட்ராங் பார்த்துக்கொண்டிருந்த போது மர்ம கும்பலால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்.
கொலையாளிகள் உணவு டெலிவரி பணியாளர்கள் போல் வேடமிட்டு வந்து கொலையே அரங்கேற்றியுள்ளனர். இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட திருஙேங்கடம் என்பவர் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தமன் பொன்னை பாலு கைது செய்யப்பட்டர். இந்த கொலை சம்பவத்தில் “மூன்று கும்பல்கள்” இணைந்து இருப்பது தெரியவந்தது.
முன்னதாக இந்த கொலை வழக்கு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் வகையில் நடைபெற்றதாக கருதப்பட்டது. ஆனால் தொடர் விசாரணையில் பல முன் விரோதங்கள் இருந்தது. தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 28 பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் காவல் துறை முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லையென கோரி CBI விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கப்பட்டுள்ளது, மேலும் உயர்நீதிமன்றம் காவல்துறையிடமிருந்து பதில் கோரியுள்ளது.
இதனிடையே இன்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாத காலத்திற்குள் இடைக்கால குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் தெரிவித்துள்ளது.