MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவிற்கு குடைச்சல் கொடுக்க தயாராகும் காங்கிரஸ்! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்

திமுகவிற்கு குடைச்சல் கொடுக்க தயாராகும் காங்கிரஸ்! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி குறித்த அறிவிப்பு திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்டு போஸ்டர் ஒட்டியிருப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Apr 13 2025, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Congress party demands share in government : தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பிடித்து உள்ளது. இந்த கூட்டணியானது கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்,

உள்ளாட்சி தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் என அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
BJP ADMK alliance

BJP ADMK alliance

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி

அதே நேரம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் அவ்வப்போது திமுகவிற்கு ஷாக் கொடுத்து வருகிறது.  அந்த கட்சிகளிடம் சமூகமாக பேசி திமுக தலைமை அமைதிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எதிர் அணியில் உள்ள அதிமுக மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக அறிவிப்பின் போது 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படுவதாகவும், மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் எனவும்  அமித்ஷா அறிவித்தார்.

36
Dmk alliance parties

Dmk alliance parties

திமுகவிற்கு நெருக்கடி

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தமிழகத்தில் திமுக- அதிமுக மட்டுமே ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி என்பது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.   இதே போல அரசியல் களத்தில் இறங்கியுள்ள தவெகவும் கூட்டணி ஆட்சிஎன ஏற்கனவே தெரிவித்துள்ளது.

 இதனை ஷாக்காக வைத்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் அமைச்சரவையில் பங்கு தொடர்பாக முழக்கத்தை எழுப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே திமுக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.

46
Congress poster politics

Congress poster politics

காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளது.  அந்த போஸ்டரில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என குறிப்பிட்டு 2026ஆம் ஆண்டின் தமிழகத்தின் துணை முதல்வர் செல்வப்பெருந்தகை என அச்சிடப்பட்டுள்ளது.  இந்த போஸ்டர் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 200 தொகுதியை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ள திமுகவிற்கு, காங்கிரஸ் கட்சியின் இந்த குரல் ஷாக் கொடுத்துள்ளது.

56
Congress party demands share in government

Congress party demands share in government

ஆட்சியில் பங்கு கேட்குமா காங்கிரஸ்

யாருடன் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் மத்தியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களே திமுக தலைமையிடம் கூட்டணி ஆட்சி தொடர்பான தங்களது கோரிக்கைகளை முன்வைப்பார்களா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே சுவரொட்டி ஒட்டிய காங்கிரஸ் மாநில செயலாளருக்கு விளக்கம் கேட்டு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த சுவரொட்டி விளம்பர செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு, ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டதாகும்.

66

விளக்கம் அளிக்க உத்தரவு

உங்களுடைய இந்த செயலுக்கு தகுந்த விளக்கத்தை 15 தினங்களுக்குள் எழுத்துபூர்வமாக நேரில் வந்து விளக்க வேண்டும். தாங்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் கலந்துபேசி உங்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அதிமுக பாஜக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரஸ்
திமுக கூட்டணி கட்சிகள்
மு. க. ஸ்டாலின்
செல்வப்பெருந்தகை
எடப்பாடி பழனிசாமி அதிமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
Now Playing
விசிகவுக்கு ஷாக்..! திமுகவில் இணைந்த பனையூர் பாபு..! ஸ்டாலின் அளித்த வரவேற்பு வைரல்
Recommended image3
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved