MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் மினி பேருந்து.! எந்த எந்த வழித்தடத்தில் இயங்கப்போகிறது- ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சென்னையில் மினி பேருந்து.! எந்த எந்த வழித்தடத்தில் இயங்கப்போகிறது- ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சென்னையில் மினி பேருந்துகளை இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 10, 2025க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 28 2025, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள (சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட) புறநகர் பகுதிகளில் மினி பேருந்து இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மினி பேருந்து இயக்குவதற்கு புதிய அனுமதி சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தமிழகத்தில் மினி பேருந்து

தமிழகத்தில் மினி பேருந்து

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது, இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த எந்த இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை, வடகிழக்கில் புதியதாக 6 வழித்தடங்களும்,

35
சென்னையில் புதிய வழிதடத்தில் மினி பேருந்து

சென்னையில் புதிய வழிதடத்தில் மினி பேருந்து

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை, வடக்கில் 7 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அம்பத்தூரில் 9 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பூவிருந்தவல்லியில் 9 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். செங்குன்றத்தில் 2 வழித்தடங்களும் ஆக மொத்தம் 33 வழித்தடங்கள் புதியதாக கண்டறியப்பட்டுள்ளது.

45
77 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்கம்

77 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்கம்

அதேபோன்று, சென்னை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சோழிங்கநல்லூரில் புதியதாக 11 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை, தெற்கில் 6 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். சென்னை, தென்மேற்க்கில் 9 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கத்தில் 13 வழித்தடங்களும் ஆக மொத்தம் 39 வழித்தடங்கள் புதியதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதியதாக கண்டறியப்பட்டுள்ள சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திலுள்ள 72 வழித்தடங்கள் தொடர்பான விவரங்களும் சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

55
விண்ணப்பிக்க அழைப்பு

விண்ணப்பிக்க அழைப்பு

மேற்கண்ட புதியதாக கண்டறியப்பட்டுள்ள 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர் குறிப்பிட்ட வழித்தட விவரங்களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 10.03.2025-க்குள் விண்ணபிக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Seeman : எலெக்‌ஷன் ரிசல்டால் ரஜினி ரொம்ப வருத்தப்பட்டார் - சூப்பர்ஸ்டாரை சிக்கலில் சிக்க வைத்த சீமான்
Recommended image2
Now Playing
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை & எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்: வைகோ காட்டம்!
Recommended image3
Now Playing
ஒரு நிலையற்ற ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved