MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijay : குதிரை பேர அரசு இல்லை... இது குதிரை வேக அரசு - சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொடுத்த மாஸ் பதிலடி

Vijay : குதிரை பேர அரசு இல்லை... இது குதிரை வேக அரசு - சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொடுத்த மாஸ் பதிலடி

CM Joseph Vijay : தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழ்நாட்டில் குதிரை பேர அரசியல் நடப்பதாக எதிர்க்கட்சியினர் சிலர் குற்றம்சாட்டிய நிலையில், முதல்வர் விஜய் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 13 2026, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
CM Joseph Vijay Befitting Reply
Image Credit : ANI

CM Joseph Vijay Befitting Reply

தமிழக முதலமைச்சரும், TVK தலைவருமான சி. ஜோசப் விஜய், தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். அதில் பாஜக எம்.எல்.ஏ எம். போஜராஜன், இந்த வாக்கெடுப்பில் தங்கள் கட்சி நடுநிலை வகிக்கும் என்று அறிவித்தார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக, ஒரே ஒரு தொகுதியில் வென்றது. உதகமண்டலம் தொகுதியில் 976 வாக்குகள் வித்தியாசத்தில் போஜராஜன் வெற்றி பெற்றார். இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தவெக
Image Credit : ANI

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தவெக

மறுபுறம், பாட்டாளி மக்கள் கட்சி இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காது என அக்கட்சியின் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி சட்டசபையில் தெரிவித்தார். பாமக-வுக்கு சட்டசபையில் நான்கு எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸ், சிபிஐ(எம்), மற்றும் விசிக எம்.எல்.ஏ-க்கள் TVK அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோரும் TVK அரசுக்கு ஆதரவளித்துள்ளனர். இதுதவிர அதிமுகவின் எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு தரப்பு TVK அரசுக்கு ஆதரவு அளித்தது. இதன்மூலம் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது தமிழக வெற்றிக் கழகம்.

Related Articles

Related image1
CM Vijay Wins Floor Test: 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் ஜோசப் விஜய்
Related image2
Now Playing
CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
34
குதிரை வேக அரசு
Image Credit : ANI

குதிரை வேக அரசு

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குதிரை பேரம் நடந்திருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதனை திட்டவட்டமாக மறுத்த தவெக தலைவர் விஜய், இது குதிரை வேகத்தில் செயல்படுகிற அரசு என்பதை ஆணித்தனமாக கூறினார் முதல்வர் விஜய்.

44
எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு
Image Credit : facebook

எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அமைச்சர் பதவிகள், வாரியத் தலைவர் பதவிகள் தருவதாக ஆசை காட்டி, சில எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாக தங்களுக்குத் தகவல் வந்திருப்பதாக குற்றம்சாட்டினார். "நாங்கள் ஒன்றும் எதிரிக்கட்சி இல்லை, பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படவே விரும்புகிறோம்," என்று கூறிய அவர், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றார்.

'இரட்டை இலை' சின்னத்தில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாகவும், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதில் அதிமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கியது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது, மற்றும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay Wins Floor Test: 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் ஜோசப் விஜய்
Recommended image2
Now Playing
CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
Recommended image3
Now Playing
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் தேவை: சட்டமன்றத்தில் வன்னி அரசு பேச்சு !
Related Stories
Recommended image1
CM Vijay Wins Floor Test: 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் ஜோசப் விஜய்
Recommended image2
Now Playing
CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved