TVK govt wins Floor Test | தமிழக வெற்றி கழகம் அரசு தொடர மொத்தமாக 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவையென்ற நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வாக்கெடுப்பில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்புக்கு முன்பாக தவெக மீது குதிரைபேரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதான எதிர்க்கட்சியான திமுக வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனால் தீர்மானத்திற்கு எதிரான வாக்குகள் கணிசமாகக் குறைந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், தீர்மானத்திற்கு எதிராக 22 உறுப்பினர்களும், நடுநிலை வகிப்பதாக 5 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து தவெக பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.

Scroll to load tweet…

Scroll to load tweet…