MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை டூ சபரிமலை அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எந்தெந்த டைம் தெரியுமா? முழு விவரம்!

சென்னை டூ சபரிமலை அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எந்தெந்த டைம் தெரியுமா? முழு விவரம்!

Chennai-Sabarimala Special Bus 2025: சபரிமலை சீசன் தொடங்கியதை தொடர்ந்து சென்னையில் இருந்து பம்பைக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் புறப்படும் நேரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Nov 17 2025, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சபரிமலை கோயில் நடை திறப்பு
Image Credit : Asianet News

சபரிமலை கோயில் நடை திறப்பு

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல விளக்கு, மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் சபமரிமலை நோக்கி ஐயப்ப பக்தர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தினமும் 90,000 பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். ஐயப்பனை தரிசிக்க முதல் சில நாட்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிறப்பு ரயில்கள் இயக்கம்
Image Credit : Google

சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஆன்லைன் முன்பதிவு மட்டுமின்றி நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு வசதியும் உள்ளது. சபரிமலை பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனின்போது சென்னையில் இருந்து பம்பைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

34
சென்னையில் இருந்து சபரிமலை சிறப்பு பேருந்துகள்
Image Credit : X

சென்னையில் இருந்து சபரிமலை சிறப்பு பேருந்துகள்

இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகள் எப்போது இயக்கப்படும்? என பக்தர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், சென்னையில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ''கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

44
கோயம்பேடு, கிளாம்பக்கத்தில் இருந்து புறப்படும் நேரம் என்ன?
Image Credit : our own

கோயம்பேடு, கிளாம்பக்கத்தில் இருந்து புறப்படும் நேரம் என்ன?

இந்த ஆண்டிற்கான சபரிமலை சிறப்பு பேருந்துகள் அய்யப்ப பக்தர்கள் பயன்பெறும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தியலிருந்து மதியம் 14.00 & 14.30 மணியளவிலும் மற்றும் டாக்டர் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து மதியம் 14.30 & 15.00 மணியளவிலும் திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் மற்றும் குமுளி வழியாக சபரிமலைக்கு தற்போது இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

முன்பதிவு செய்வது எப்படி?

இந்த சிறப்பு பேருந்துகள் பம்பை வரை இயக்கப்படும். மேலும், 90 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, http://tnstc.in என்ற இணையதளத்திலும் மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சபரிமலை
கோவில் நிகழ்வுகள்
கோவில்
கேரளா
டிஎன்எஸ்டிசி
தமிழ்நாடு
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(20.0 ov)124/4
IND need 19 runs in 72 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?
Recommended image3
Now Playing
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
Related Stories
Recommended image1
சபரிமலை வரும் பக்தர்களுக்கு 5 லட்சம் இன்சூரன்ஸ்.! நிபந்தனைகள் தளர்வு- வெளியான புதிய அறிவிப்பு
Recommended image2
சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு..! கேரள அரசு போட்ட கண்டிஷன்..! தப்பித் தவறி கூட இதை செய்யாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved