MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Finance With Harish Death: பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொ*லை! காரணம் இந்த இன்ஸ்டா பிரபலமா? அதிர வைக்கும் பின்னணி!

Finance With Harish Death: பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொ*லை! காரணம் இந்த இன்ஸ்டா பிரபலமா? அதிர வைக்கும் பின்னணி!

Finance With Harish Death : 13 லட்சம் ஃபாலோவர்ஸ் வெச்சிருந்த 27 வயசான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் வி. ஹரிஷ், சைபர் புல்லிங்கால் மனமுடைந்து தற்கொ*லை செய்துள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் இது தொடர்பாக தீவிரமா விசாரிச்சிட்டு வராங்க.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 21 2026, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
யார் இந்த பைனான்ஸ் வித் ஹரிஷ்?
Image Credit : instagram

யார் இந்த பைனான்ஸ் வித் ஹரிஷ்?

27 வயசான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் வி. ஹரிஷ், சென்னை முட்டுக்காடு பகுதியில இருக்கிற ஒரு வாடகை வில்லாவுல செவ்வாய்க்கிழமை அன்னைக்கு தூக்கிட்டு தற்கொ*லை செஞ்சுகிட்டார். இவருக்கு சோஷியல் மீடியாவுல 1.3 மில்லியன் (13 லட்சம்) ஃபாலோவர்ஸ் இருக்காங்க. அவர் கடந்த அஞ்சு வருஷமா ஃபைனான்ஸ் மற்றும் முதலீடு சம்பந்தமான வீடியோக்களை போட்டுட்டு வந்தார். தொடர்ந்து வந்த சைபர் மிரட்டல்கள், மோசமான கமெண்ட்ஸ், தன்னோட சேனல்கள் அடிக்கடி முடக்கப்பட்டதால அவர் ரொம்பவே மன உளைச்சல்ல இருந்திருக்கார்.

சேனல்கள் முடக்கம்!

கடந்த செப்டம்பர் மாசம், நிறைய பேர் ரிப்போர்ட் பண்ணதால ஹரிஷோட மெயின் சேனலும் இன்னொரு அக்கவுண்டும் முடக்கப்பட்டுச்சு. அதுக்கப்புறம் அவர் புதுசா ஒரு சேனல் ஆரம்பிச்சார். ஆனா, அதையும் ரிப்போர்ட் பண்ணி முடக்கிட்டாங்க. இதனால அவர் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கார்னு அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அப்பா கொடுத்த புகார்!
Image Credit : instagram

அப்பா கொடுத்த புகார்!

ஹரிஷோட அப்பா ஜே. விநாயகம் போலீஸ்ல ஒரு புகார் கொடுத்திருக்கார். ஜேசன் சாமுவேல் அப்படிங்கிற இன்னொரு இன்ஃப்ளூயன்ஸர், தன்னோட பையனை தொடர்ந்து சைபர் புல்லிங் செஞ்சதாகவும், அவதூறான போஸ்ட்களை போட்டு மிரட்டியதாகவும் அவர் அந்த புகார்ல சொல்லியிருக்கார். குறிப்பா, அக்டோபர் 18-ம் தேதி, ஹரிஷ் மக்களை ஏமாத்துறார்னு சொல்லி ஜேசன் சாமுவேல் சில வீடியோக்களை வெளியிட்டிருக்கார்.

தற்கொ*லைக்கு முன் வீடியோ!

தற்கொ*லை செஞ்சுக்குறதுக்கு முன்னாடி ஹரிஷ் ஒரு வீடியோவை ரெக்கார்ட் பண்ணியிருக்கார். தன்னோட இந்த முடிவுக்கு ஜேசன் சாமுவேல்தான் காரணம்னு அதுல அவர் சொல்லியிருக்கார். தன்னோட எல்லா சோஷியல் மீடியா அக்கவுண்ட்களையும் முடக்குவேன், புதுசா எந்த அக்கவுண்டும் ஓபன் பண்ண விடமாட்டேன்னு ஜேசன் மிரட்டியதா ஹரிஷ் அந்த வீடியோவுல குற்றஞ்சாட்டியிருக்கார்.

34
ஜேசன் சாமுவேல் விளக்கம்!
Image Credit : instagram

ஜேசன் சாமுவேல் விளக்கம்!

இந்த குற்றச்சாட்டுகளை சோஷியல் மீடியா போஸ்ட் மூலமா ஜேசன் சாமுவேல் மறுத்திருக்கார். ஹரிஷோட தகுதியையும், அவர் அட்வைஸ் கொடுக்குறதுக்கான அதிகாரத்தையும் மட்டும்தான் நான் கேள்வி கேட்டேன்னு அவர் சொல்லியிருக்கார். செபி (SEBI) அங்கீகாரம் பெற்ற முதலீட்டு ஆலோசகர் (RIA) லைசென்ஸ் ஹரிஷ்கிட்ட இல்லைன்னும், AMFI ரிஜிஸ்ட்ரேஷன் பத்தி அவர் தப்பா சொல்லியிருக்கார்னும் ஜேசன் சொல்லியிருக்கார். ஹரிஷ் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பார்னு தான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைன்னும் அவர் விளக்கம் கொடுத்திருக்கார்.

44
போலீஸ் விசாரணை!
Image Credit : Social Media

போலீஸ் விசாரணை!

கானத்தூர் போலீஸார் இப்போ சந்தேக மரணம்னு வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க. ஹரிஷ் சாகுறதுக்கு முன்னாடி பேசுன வீடியோவை செக் பண்ணனும், டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்காம காப்பாத்தணும், அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டதன் பின்னணியை விசாரிக்கணும்னு ஹரிஷோட அப்பா கோரிக்கை வெச்சிருக்கார். ரெண்டு தரப்பு வாக்குமூலங்களையும் போலீஸார் இப்போ தீவிரமா விசாரிச்சிட்டு வராங்க.

Meta Rules: இனி ராத்திரி இன்ஸ்டா, பேஸ்புக் பார்க்க முடியாது! பகலிலும் டைம் லிமிட்! மெட்டா புது ரூல்ஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மழைநீர் வடிகால் பணிகளில் திடீர் ஆய்வு: களம் இறங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் !
Recommended image2
Now Playing
சென்னையில் தொடர் மழை: தி.நகரில் தீவிரமாகும் நிவாரணப் பணிகள் – அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு!
Recommended image3
Now Playing
சென்னை காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய் !
Related Stories
Recommended image1
Now Playing
Social Media குற்றவாளிகளின் ஆயுதமா? | Social Media Impact in Society
Recommended image2
Simbu social media record : ஒரே ஆண்டில் ரஜினி, தனுஷ், சூர்யாவை ஓரங்கட்டி.... சிம்பு படைத்த டாப் டக்கர் சாதனை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved