- Home
- Tamil Nadu News
- Senior Citizen Free Bus: அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!
Senior Citizen Free Bus: அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!
Senior Citizen Free Bus: மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சூப்பர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டோக்கன்கள் எப்படி வாங்கலாம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசம்
சென்னையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியடையும்விதமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மாநகரைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 வரை பயன்படுத்தக்கூடிய இலவச பேருந்து பயண டோக்கன்கள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கபட உள்ளன. ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு மொத்தம் 60 டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.
சென்னையில் சிறப்பு முகாம்கள்
இதேபோல் புதிய பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள அடையாள அட்டைகளை புதுப்பித்தல் ஆகிய பணிகள் சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் ஜூன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மேற்கண்ட நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை என ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும்.
மூத்த குடிமக்கள் இலவச டோக்கன்கள் பெறலாம்
இந்த முகாம்கள் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை, தாம்பரம், கிளாம்பாக்கம், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, வடபழனி, மாதவரம், எண்ணூர், தி.நகர், குன்றத்தூர், அய்யப்பன்தாங்கள் என 39 பணிமனைகளில் நடைபெற உள்ளன.
ஆகவே மூத்த குடிமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று மாநகர பேருந்துகளில் பயணிக்க இலவச டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த முகாம்களில் புதிய பேருந்து அட்டைகள் வழங்கும் பணியும், பேருந்து அட்டைகளை புதுப்பிக்கும் பணியும் நடைபெறும் எனவும் மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
மூத்த குடிமக்கள் இலவச டோக்கன் பெற மற்றும் பேருந்து அட்டைகளை புதிதாக பெற ரேஷன் கார்டு (Ration Card), ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கல்விச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் எதாவது ஒன்று, 2 வண்ணப் புகைப்படங்கள் ஆகிய ஆகிய ஆவணங்கள் இருப்பது அவசியமாகும்.
இதேபோல் ஏற்கெனவே உள்ள டோக்கன்களை புதுப்பிக்க, பேருந்து அட்டைகளை புதுப்பிக்க தங்களின் பழைய அடையாள அட்டை, தங்களின் தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் (Passport Size) புகைப்படம் ஒன்றும் வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94450 30516 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
மூத்த முடிமக்களே யோசிக்காதீங்க...
இந்த சிறப்பு முகாம் காலத்திற்குப் பிறகு, 1.08.2026 முதல் 20.12.2026 வரை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நாட்களில் மற்றும் அலுவலக நேரத்தில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. ஆகவே மூத்த குடிமக்களே... இன்னும் என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க. இந்த முகாம்களுக்கு சென்று டோக்கன் வாங்கி மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யுங்க.

