பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்.! உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
தமிழக அரசு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். தகுதியானவர்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்.! உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவ கையில் பெண்கள் சொந்தமாக முன்னேற வேண்டும் யாரையும் நம்பி இருக்க கூடாது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் திட்டமானது வகுக்கப்படுகிறது. அதன் படி மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை, திருமண உதவித்திட்டம், கர்ப்பிணி பெண்கள் உதவி திட்டம், கணவனை இழந்த மற்றும் கைம்பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
முன்னாள் ராணுவ வீரர் குடும்பங்களுக்கான அறிவிப்பு
மேலும் சொந்த தொழில் தொடங்க திட்டமிடும் நபர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி தேவையான கடனுதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையில் தமிழக அரசு முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்திடும் வகையில் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இலவச தையல் இயந்திரம்
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழிசெல்வராஜ் கடந்த 26.06.2024 அன்று 2025-ம் ஆண்டிற்கான பொதுத்துறை மானியக் கோரிக்கையின் போது முன்னாள் படைவீர் நலன் சார்ந்த அறிவிப்பினை வெளியிட்டார்கள். அதன்படி, முன்னாள் படைவீரரின் மனைவி மற்றும் கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது மூன்று மாத தையற் பயிற்சி சான்று பெற்றிருப்பின் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துடன் இலவச தையல் இயந்திரம் வழங்கபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் தையல் இயந்திரம்.?
மேலும் பயிற்சி வழங்கிய நிறுவனத்தால் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படாத நிலையில் ஒரு முறை மட்டும் தையல் இயந்திரம் வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டார்கள். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு சென்னை. சைதாப்பேட்டையில் உள்ள உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக 044-22350780 தொடர்பு கொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.