MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வியாபாரிகளின் அடையாள அட்டை ரத்து.! இது தான் லாஸ்ட் சான்ஸ்- தேதி அறிவித்த சென்னை மாநகராட்சி

வியாபாரிகளின் அடையாள அட்டை ரத்து.! இது தான் லாஸ்ட் சான்ஸ்- தேதி அறிவித்த சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பிப்ரவரி 28, 2025 க்குள் புதிய அட்டையைப் பெறாதவர்களின் பழைய அட்டைகள் ரத்து செய்யப்படும். சிறப்பு முகாம்கள் பிப்ரவரி 28 வரை அமைக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 18 2025, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வியாபாரிகளின் அடையாள அட்டை ரத்து.! இது தான் லாஸ்ட் சான்ஸ் தேதி அறிவித்த சென்னை மாநகராட்சி

வியாபாரிகளின் அடையாள அட்டை ரத்து.! இது தான் லாஸ்ட் சான்ஸ்- தேதி அறிவித்த சென்னை மாநகராட்சி

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல திடீர் திடீரென சாலையோரங்களில் புதிது புதிதாக கடைகள் ஆரம்பிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து அடையாள அட்டையானது அந்த அந்த மாநகராட்சி சார்பாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

24
Chip பொருத்திய QR Code உடன் ஐடி கார்டு

Chip பொருத்திய QR Code உடன் ஐடி கார்டு

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள தகவலில்,  பெருநகர சென்னை மாநகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரம் மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம், திட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் Weblink பயன்பாடுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

34
சிறப்பு முகாம் அறிவிப்பு

சிறப்பு முகாம் அறிவிப்பு

இந்த அட்டை வழங்குவதற்கு நகர விற்பனை குழுவின் 24.01.2025 அன்று நடைபெற்ற 9வது கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள அடையாள அட்டைகளை பெறுவதற்கு 27.012025 முதல் 15.02.2025 வரை அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் வழங்க உத்தரவிடப்பட்டு, 13.02.2025 வரை 4.253 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இதுவரை மொத்தம் 24.573 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,567 அடையாள அட்டைகள் வழங்க கடைசி வாய்ப்பாக மீண்டும் 16.02.2025 முதல் 28.02.2025 வரை அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வியாபாரிகளுக்கான புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். 

44
அடையாள அட்டை ரத்து

அடையாள அட்டை ரத்து

மேலும், 28.02.2025க்குள் பெற்றுக்கொள்ளாத சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. எனவே, இந்த இறுதி வாய்ப்பினை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி பழைய அடையாள அட்டைகளை ஒப்படைத்து OTP வாயிலாக புதிய அடையாள அட்டைகளை அந்தந்த வார்டுகளில் 28.02.2025 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சென்னை மாநகராட்சி
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
Recommended image2
கே.என்.நேருவை விடாமல் சுத்துப்போடும் அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!
Recommended image3
இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved