MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மெரினா கடற்கரைக்கு நுழைவு கட்டணமா.? ஷாக்கான பொதுமக்கள் - விளக்கம் கொடுத்த மாநகராட்சி

மெரினா கடற்கரைக்கு நுழைவு கட்டணமா.? ஷாக்கான பொதுமக்கள் - விளக்கம் கொடுத்த மாநகராட்சி

மெரினா கடற்கரையில் ரூ.6 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 50 ஏக்கர் நிலத்தில் புதிய வசதிகள் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மெரினா கடற்கரை கட்டணம் தொடர்பாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Apr 16 2025, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Marina Beach Entrance Fee ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை மெரினா கடற்கரை, நாள் தோறும் பல லட்சம் மக்கள் வந்து செல்கிறார்கள். அழகிய மணற்பரப்பில் நடக்க மக்கள் விருப்பப்படுவார்கள். இந்த நிலையில் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

இந்த சூழலில் மெரினா கடற்கரையில்  நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் அடிப்படையில் 6 கோடி ரூபாய் செலவில், மெரினா கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. எனவே  250 ஏக்கர் நீளமுள்ள மெரினா கடற்கரையில் 50 ஏக்கர் நிலத்தை சென்னை மாநாகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Marina Beach Entrance Fee

Marina Beach Entrance Fee

மெரினா கடற்கரை - நீலக்கொடி திட்டம்

இதில் சாய்வு இருக்கைகள், சிற்றுண்டி கடைகள், அவுட்டோர் ஜிம், வாட்ச்-டவர்ஸ், தோட்டம், கழிவறை சர்ஃபிங் பகுதி மற்றும் முதலுதவி மையங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. சர்வீஸ் லேனில் பார்க்கிங் வசதிகள், கடற்கரையில்  100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மண்டலத்திற்குள் வியாபாரிகள் கடைகள் அமைக்க தடை செய்யப்பட உள்ளனர்.

மே மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக புதுப்பிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

34
Blue flag project

Blue flag project

மாத செலவு 6 லட்சம் ரூபாய்

தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சுமார் 25 தொழிலாளர்களை கடற்கரையை கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்த உள்ளது.  கடற்கரையை கண்காணிக்க ஆகும் மாத செலவு,  சம்பளம் மற்றும் இயந்திரங்கள் உட்பட ரூ.6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவளம் கடற்கரை பகுதி ஊராட்சி பகுதியில் வருவதால் பராமரிப்பு பணிகளுக்காக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

44
Marina Beach fee collection

Marina Beach fee collection

நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுமா.?

இதே போல மெரினா கடற்கரைக்கு வருபவர்களிடமும் பணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை சென்னை மாநகராட்சி மறுத்துள்ளது. இதன் படி சென்னை மாநகராட்சி வருவாய் அதிகம் உள்ள மாநகராட்சி என்பதால் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என்பதால் கட்டணம் வசூலிக்கப்படாது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
சென்னை மாநகராட்சி
தமிழ் செய்திகள்
மெரினா கடற்கரை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved