MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Amazon Flipkart fine: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..ஆன்லைனில் இதெல்லாம் பார்த்து வாங்குங்க!

Amazon Flipkart fine: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..ஆன்லைனில் இதெல்லாம் பார்த்து வாங்குங்க!

CCPA Fine: முறையாக பதிவு செய்யப்படாத களைக்கொல்லியை ஆன்லைனில் விற்பனை மற்றும் விளம்பரம் செய்ததாக அமேசான், பிளிப்கார்ட்டுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 27 2026, 08:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அபராதம்
Image Credit : pinterest

அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அபராதம்

ஆன்லைனில் எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்து வாங்கிவிடலாம் என்ற அளவுக்கு இ-காமர்ஸ் தளங்களின் பயன்பாடு இன்று அதிகரித்துவிட்டது. மளிகைப் பொருட்கள், ஆடைகள், உணவுகளில் தொடங்கி விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் வரை அனைத்தும் ஒரே கிளிக்கில் வீடு தேடி வந்து சேர்கின்றன.

ஆனால், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் முறையாக பதிவு செய்யப்பட்டதா, அதற்குத் தேவையான உரிமம் உள்ளதா என்பதை நுகர்வோர் கவனிப்பது அவசியம்.

இந்நிலையில், முறையாக பதிவு செய்யப்படாத களைக்கொல்லி மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் உள்ளிட்ட முன்னணி இ - காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அபராதம் விதித்துள்ளது.

என்ன நடந்தது? எந்த நிறுவனத்துக்கு எவ்வளவு அபராதம்? வாங்கும் முன் நுகர்வோர் கவனிக்க வேண்டியது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
எவ்வளவு அபராதம்?
Image Credit : pinterest

எவ்வளவு அபராதம்?

முறையான பதிவு இல்லாத வேளாண் ரசாயனப் பொருளை ஆன்லைனில் விற்பனை மற்றும் விளம்பரம் செய்தது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமேசான் (Amazon Seller Services) - ரூ.10 லட்சம்

பிளிப்கார்ட் (Flipkart Internet) - ரூ.10 லட்சம்

ஜியோமார்ட் (Jio Mart) - ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

38
புகார் எப்படி CCPA-வின் கவனத்துக்கு வந்தது?
Image Credit : pinterest

புகார் எப்படி CCPA-வின் கவனத்துக்கு வந்தது?

இந்த விவகாரத்தில், Crop Care Federation of India (CCFI) சார்பில் புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. உரிய பதிவு மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் களைக்கொல்லி மருந்துகளை ஆன்லைன் தளங்களில் விற்பனை மற்றும் விளம்பரம் செய்யப்படுவது தொடர்பாக இந்த புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

CCFI சார்பில் அளிக்கப்பட்ட புகார், மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, ஆன்லைன் தளங்களில் சம்பந்தப்பட்ட தயாரிப்பு எவ்வாறு பட்டியலிடப்பட்டிருந்தது? அதன் விற்பனை மற்றும் விளம்பரம் தொடர்பாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து CCPA விசாரணை மேற்கொண்டது.

48
CCPA  விசாரணை
Image Credit : pinterest

CCPA விசாரணை

இதன் ஒரு பகுதியாக, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்களிடம் CCPA விளக்கம் கோரி விசாரணை நடத்தியது. விசாரணையின் ஆரம்பகட்டத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்புகளின் ஆன்லைன் பட்டியல்கள் தங்களது தளங்களில் இருந்து நீக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

இருப்பினும், தயாரிப்பு பட்டியல்கள் நீக்கப்பட்டிருந்தாலும், அவை ஏற்கெனவே ஆன்லைன் தளங்களில் விற்பனை அல்லது விளம்பரத்துக்கு இடம்பெற்றிருந்த விவகாரம் குறித்து நுகர்வோர் ஆணையம் தொடர்ந்து ஆய்வு செய்தது.

இதன் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

58
ஆன்லைன் தளங்களின் பொறுப்பு என்ன?
Image Credit : pinterest

ஆன்லைன் தளங்களின் பொறுப்பு என்ன?

களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்ற வேளாண் ரசாயனப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும்போது, அவை சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா, விற்பனையாளரிடம் தேவையான உரிமம் உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம்.

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பொருளின் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை நிலை குறித்து போதுமான சரிபார்ப்பு செய்யாமல், ஆன்லைன் தளங்களில் அதன் விற்பனைப் பட்டியல்கள் அனுமதிக்கப்பட்டதாக CCPA விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

68
உரிமம், பாதுகாப்பு எச்சரிக்கை ஏன் முக்கியம்?
Image Credit : pinterest

உரிமம், பாதுகாப்பு எச்சரிக்கை ஏன் முக்கியம்?

களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்ற வேளாண் ரசாயனப் பொருட்களை பயன்படுத்தும் முன்பு, அதில் உள்ள ரசாயனம், கலவை, பயன்படுத்தும் முறை, பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் பதிவு/உரிம விவரங்கள் தெளிவாக இருப்பது முக்கியம்.

இதன் மூலம் அந்தப் பொருள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதா, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற தகவல்களை பயனர்கள் அறிந்து கொள்ள முடியும்.

Insecticides Act, 1968-ன் கீழ் பதிவு செய்யப்படாத பூச்சிக்கொல்லியை விற்பனை செய்வது, கையிருப்பில் வைத்திருப்பது, விற்பனைக்காக காட்சிப்படுத்துவது அல்லது விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்ய உரிய உரிமமும் தேவையாகிறது.

அதுமட்டுமின்றி, ரசாயனப் பொருளின் லேபிளில் தேவையான எச்சரிக்கைகள், பயன்பாட்டு விவரங்கள் மற்றும் பதிவு தொடர்பான தகவல்கள் இடம்பெற வேண்டும்.

78
நிறுவனங்களுக்கு அடுத்த உத்தரவு என்ன?
Image Credit : pinterest

நிறுவனங்களுக்கு அடுத்த உத்தரவு என்ன?

அபராதம் விதித்ததுடன், சம்பந்தப்பட்ட களைக்கொல்லி பொருளின் விற்பனை மற்றும் விளம்பரத்தை உடனடியாக நிறுத்துமாறு CCPA சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தங்களது ஆன்லைன் தளங்களில் இதுபோன்று சட்ட விதிகளுக்கு முரணான அல்லது நுகர்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் வேறு ஏதேனும் பட்டியலிடப்பட்டுள்ளனவா? என்பதை நிறுவனங்களே ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுய தணிக்கை (Self-Audit) மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கண்டறியப்படும் விதிமீறல்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர், அதுகுறித்த Compliance Report-ஐ 15 நாட்களுக்குள் CCPA-விடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

88
நுகர்வோர் கவனிக்க வேண்டியது
Image Credit : pinterest

நுகர்வோர் கவனிக்க வேண்டியது

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒரு வேளாண் ரசாயனப் பொருள் விற்பனைக்கு இருப்பதால் மட்டுமே, அது சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பொருள் என்று கருதிவிடக் கூடாது.

குறிப்பாக களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்ற பொருட்களை வாங்குவதற்கு முன்பு, அதன் பதிவு விவரம், விற்பனையாளரின் உரிமம், ரசாயனக் கலவை, பயன்படுத்தும் முறை மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் ஆகியவற்றை சரிபார்ப்பது அவசியம்.

சந்தேகம் இருந்தால், உரிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் தயாரிப்பின் லேபிள் விவரங்களை சரிபார்த்த பிறகே பயன்படுத்துவது பாதுகாப்பான நடைமுறையாகும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஷாப்பிங்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
உதயநிதி ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார் – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
Recommended image2
Now Playing
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்பு!
Recommended image3
Now Playing
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடியில் "ராம யாத்ரா" நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்!
Related Stories
Recommended image1
Amazon Great Freedom Sale: எந்த பொருட்களுக்கு அதிக தள்ளுபடி? வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
Recommended image2
Amazon Sale : ₹5,000 முதல் ₹50,000 வரை சேமிக்கலாம்! அக்டோபர் 8க்கு முன் இந்த 10 பொருட்களை வாங்காதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved