MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நான் ஏன் பதவி விலக வேண்டும்..? திடீரென முகம் சிவந்த நயினார்: மதுரையில் பரபரப்பு

நான் ஏன் பதவி விலக வேண்டும்..? திடீரென முகம் சிவந்த நயினார்: மதுரையில் பரபரப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சந்திப்பு மிகவும் இயல்பானது, அதனை பெரிது படுத்த வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Sep 11 2025, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செங்கோட்டையன் அமித்ஷா சந்திப்பு சாதாரணமானது
Image Credit : Asianet News

செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு சாதாரணமானது

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் செய்கோட்டையன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது மிகவும் சாதாரணமானது. அதனை பெரிது படுத்த தேவையில்லை. மேலும் அவர்களின் சந்திப்பு தொடர்பாக எனக்கு முழுயைாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த பின்னர் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.

24
அதிமுக.வை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை
Image Credit : Asianet News

அதிமுக.வை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை

செங்கோட்டையன், அமித்ஷா சந்திப்பால் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை. கூட்டணி எப்பொழுதும் போல இயல்பாகத் தான் இருக்கிறது. அதிமுக.வை உடைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்ற அவசியம் பாரிதிய ஜனதா கட்சிக்கு கிடையாது. அதிமுக தற்போதும் பலமாக தான் இருக்கிறது. எங்கள் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அவர் சொல்வது தான் இறுதியான முடிவு. கூட்டணிக்குள் மீண்டும் வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் என இருவரிடமும் பேசத் தயாராக இருக்கிறேன்.

Related Articles

Related image1
உலக தலைவர்களில் முதன்மையானவர் மோடி... இரும்பு மனிதர் அமித்ஷா.! பாஜகவினரை புகழ்ந்து தள்ளும் செங்கோட்டையன்
Related image2
அமித்ஷா பேச்சை மீறி இபிஎஸ்ஸை தூக்கிப் பிடிக்கும் நயினார்! ஆணவம்; அகம்பாவ‌ம்! போட்டுத் தாக்கும் டிடிவி!
34
பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை
Image Credit : X/@NainarBJP

பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை

பாஜக மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுக்கு செல்லும் என்று துணைமுதல்வர் உதயநிதி சொல்கிறார். 2026 தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சி ஐசியுக்கு செல்லும் என்பதை அனைவரும் பார்ப்பார்கள். நான் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக செய்திகள் பரவுகின்றன. நான் ஏன் பதவி விலக வேண்டும்? நட்டாவும், அமித் ஷாவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் பதவி விலக வேண்டிய அவசியம் கிடையாது. இனி இது போன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.

44
திமுக வலுவாக இருப்பதாக சொன்ன அண்ணாமலை?
Image Credit : Asianet News

திமுக வலுவாக இருப்பதாக சொன்ன அண்ணாமலை?

திமுக வலுவாக இருக்கிறது என்றோ, அவர்கள் 40 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருப்பதாகவோ அண்ணாமலை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதுபோன்ற கருத்துகளை திமுக.வினர் பரப்பி வருவதாக தான் குறிப்பிட்டார். ஆனால் அதனை சிலர் திரித்து கூறுகின்றனர்” என்று தெரிவித்தார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயினார் நாகேந்திரன்
பிஜேபி
செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Related Stories
Recommended image1
உலக தலைவர்களில் முதன்மையானவர் மோடி... இரும்பு மனிதர் அமித்ஷா.! பாஜகவினரை புகழ்ந்து தள்ளும் செங்கோட்டையன்
Recommended image2
அமித்ஷா பேச்சை மீறி இபிஎஸ்ஸை தூக்கிப் பிடிக்கும் நயினார்! ஆணவம்; அகம்பாவ‌ம்! போட்டுத் தாக்கும் டிடிவி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved