- Home
- Tamil Nadu News
- சென்னையை குறி வைக்கும் புதிய புயல்?.. அடிச்சி துவம்சம் செய்யப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
சென்னையை குறி வைக்கும் புதிய புயல்?.. அடிச்சி துவம்சம் செய்யப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் எதிர்பார்த்த மழை இல்லை. அதே வேளையில் இலங்கையில் கனமழையுடன் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

தமிழகத்தை ஏமாற்றும் மழை
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யவில்லை. காலையில் கடும் குளிரும், பகலில் வெயிலும் கொளுத்தி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் என அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் நிலையான மழை இல்லை. இதனால் மக்கள் வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என ஏங்கித் தவித்து வந்தனர்.
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்
இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது வட அட்சரேகை 6.3°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 84.0°E அருகில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (ஜனவரி 9) அன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடையே கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு மிக அருகில்
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இப்போது இலங்கையின் பொத்துவிலில் இருந்து சுமார் 250 கி.மீ கிழக்கு-தென்கிழக்கேயும், அம்பாந்தோட்டையில் இருந்து 320 கி.மீ கிழக்கு-வடகிழக்கேயும், மட்டக்களப்பில் இருந்து 300 கி.மீ கிழக்கு-தென்கிழக்கேயும், திருகோணமலையில் இருந்து 400 கி.மீ தென்கிழக்கேயும் நிலை கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 860 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும், காரைக்காலில் இருந்து 690 கி.மீ தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை, கடலோர பகுதிகளில் மழை பெய்யுமா?
கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் எதிர்பார்த்த மழை இல்லை. அதே வேளையில் இலங்கையில் கனமழையுடன் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
தற்போது புதிதாக உருவாகும் புயலும் இலங்கை நோக்கி தான் நகர்கிறது. இதனால் அங்கு மழை, காற்றுடன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே வேளையில் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

