மாணவர்களுக்கு அடுத்தடுத்து குட் நியூஸ்.! பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அமைச்சர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
rain tamilnadu
மிரட்டி வரும் மழை
தமிழகத்தில் இன்னும் வட கிழக்கு பருவ மழை தொடங்காத நிலையில் இதற்கு முன்னோட்டமாக தற்போதே மழையானது சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. கோவை, மதுரை, திருச்சி என கொட்டித்தீர்த்த மழை தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு, காட்டு என காட்டி வருகிறது.
இதனால் பல இடங்களில் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பாக மீட்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
School Leave
வானிலை மையம் எச்சரிக்கை
மேலும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒரே நேரத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாகவே தற்போது கன மழை கொட்டி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தீவிரத்தைப்பொறுத்து நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
rain in chennai
பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு
இந்தநிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்கபாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் கீழ்காணும் வேண்டுகோளை முன்வைக்கின்றேன். பள்ளி மற்றும் மாணவர்கள்-ஆசிரியர்கள் தொடர்பான ஆவணங்கள் கீழ்தளத்தில் இருக்கும் பட்சத்தில், அதனை உடனடியாக மழைநீர் புகாத வண்ணம் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது மேல்தளத்திற்கு மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
online class
ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை
இதனையடுத்து மற்றொரு பதிவில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும்(Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் . ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.