- Home
- Tamil Nadu News
- பெண்களுக்கு குஷியான அறிவிப்பு.! 50ஆயிரத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணபிக்க கடைசி தேதி அறிவிப்பு
பெண்களுக்கு குஷியான அறிவிப்பு.! 50ஆயிரத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணபிக்க கடைசி தேதி அறிவிப்பு
தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பாடுபடும் சமூக சேவகர்களுக்கு விருது மற்றும் ரொக்க பரிசு வழங்குகிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்க பரிசும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்க பரிசும் வழங்கப்படும்.

மகளிர்களுக்கான திட்டங்கள்
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மகளிர்கள் சொந்த தொழில் தொடங்கி யாருடைய உதவியும் இல்லாமல் முன்னேற்ற வழி வகுக்கப்படுகிறது. மேலும் மானிய உதவிதிட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மகளிர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பாக விருதும், ரொக்கப்பரிசும் வழங்கப்படவுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் வழங்கப்படும் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர்களுக்கான சமூக சேவை விருது
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டில் சுதந்திர தின விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்க பரிசும் சான்றிதழும்,
மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 1,00,000/- ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆகவே, சென்னை மாவட்ட மக்கள் 2025 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள்.
சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு விருது
பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும், சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். இவ்விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் 12.06.2025 2 https://awards.tn.gov.in இணையதளம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
குறிப்பிட்ட தேதிக்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. முழுமையான கையேடு 3 நகல்கள் (தமிழ் (ம) ஆங்கிலத்தில்) மேலும், இணையதள விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியரகத்தில். சிங்கார வேலனார் மாளிகை, 8ஆவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 20.06.2025 ஒப்படைக்குமாறு சென்னை மாலை 4.00 மணிக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்