- Home
- Tamil Nadu News
- ஃபுல் மப்பில் வந்த கொடூரன்கள்! இளம் பெண்களை குண்டுக் கட்டாக தூக்கி சென்று அத்துமீறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
ஃபுல் மப்பில் வந்த கொடூரன்கள்! இளம் பெண்களை குண்டுக் கட்டாக தூக்கி சென்று அத்துமீறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் ஆற்றங்கரையில் இரண்டு இளம்பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் அமர்ந்திருந்தபோது, மது போதையில் வந்த மூன்று இளைஞர்கள் அவர்களை தூக்கிச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு இளம் பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் வந்த மூன்று இளைஞர்கள் இளம்பெண்களின் ஆண் நண்பர்களை அடித்து துரத்திவிட்டு, இரண்டு இளம் பெண்களையும் குண்டுக் கட்டாக தூக்கி மறைவான இடத்திற்கு கொண்டு சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் வீரபாண்டி காவல் நிலையம் அமைந்துள்ள நிலையில் மதுபோதைக் கும்பலிடம் இருந்து தப்பிய இளம் பெண் ஒருவர் அங்கிருந்து ஓடி சென்று வீரபாண்டி காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீசார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணை காப்பாற்றியதுடன் மது போதை கும்பலைச் சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் மேற்கு வங்கத்தையும், மற்றொருவர் சென்னையையும் சேர்ந்தவர்கள் என்றும்,தேனியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், இந்த இளம் பெண்களை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற வீரபாண்டி மேலத்தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் விக்னேஷ் (27),பாண்டி மகன் குணால் (28), உதயகுமார் மகன் ஹரிஹரன் (21)ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
வீரபாண்டி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரம் உள்ள கௌமாரியம்மன் கோவில் ஆற்றங்கரை பகுதியில் இரண்டு இளம் பெண்களை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.