- Home
- Tamil Nadu News
- கோட் சூட் போட்டு கெத்தாக வந்த ஸ்டாலின்.! தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடிக்கு முதலீடு.?
கோட் சூட் போட்டு கெத்தாக வந்த ஸ்டாலின்.! தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடிக்கு முதலீடு.?
உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஹூண்டாய், JSW எனர்ஜி நிறுவனம், டாடா நிறுவனம், டிவிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

அந்நிய தொழில் முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பணியானது நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் (ஜன.7, 8-ம் தேதிகளில்) இன்று காலை தொடங்கியது. இந்த விழாவில் தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளில் இருந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளது. மேலும் தமிழகத்தின் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் “1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை” (“Tamil Nadu Vision $1 Trillion”) எனும் ஆய்வறிக்கை வெளியிடப்படும். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாட்டில் JSW எனர்ஜி நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும், டாடா நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5000 கோடி முதலீடும், ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் Pagatron நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதே போல அடிடாஸ், போயிங் நிறுவனங்கள் சென்னையில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ளது.
இதையும் படியுங்கள்