Garlic Price : வண்டி, வண்டியாக வரப்போகுது பூண்டு.! எப்போது விலை குறையும் தெரியுமா.?
மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. மறுபுறம், தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது. பூண்டு விலையும் உயர்ந்து காணப்படுகிறது.இந்தநிலையில் பூண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வட மாநிலங்களில் இருந்து விரைவில் பூண்டு இறக்குமதி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது.
காய்கறிகளும் விற்பனை விலையும்
சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், நாள் தோறும் பல ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. போதிய அளவு மழை பெய்தால் காய்கறிகளின் உற்பத்தி சிறப்பாக இருக்கும். அதுவே மழையானது கொட்டித்தீர்த்தால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலையும் உச்சத்தை அடையும். எனவே போதுமான அளவு மழை பெய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மழையானது வெளுத்த வாங்கியது. இதனால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
ONION
உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை
பல இடங்களில் பயிரிடப்பட்ட வெங்காயம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதனால் காய்கறி சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்தது. எனவே ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது வரும் நாட்களில் 100 ரூபாயை எட்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் பகுதியில் ஒரு கிலோ வெங்காயத் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு பக்கத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் தக்காளியின் விலையானது சரிந்துள்ளது.
தக்காளி விலை என்ன.?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. இதனால் தக்காளியை 5 கிலோ அளவிற்கு வாங்கிச்சென்ற மக்கள் ஒரு கிலோ என வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலையில் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விற்பனைக்காக அதிகளவு சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் விலையானது கடுமையாக சரிந்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி கடந்த மாதம் 50 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு சரிந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் 14 கிலோ தக்காளி பெட்டி 1000 ருபாய் வரை 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
பூண்டு விலை இவ்வளவா.?
தற்போது 150 ரூபாய்க்கே விற்பனையாகிவருகிறது. எனவே வரும் நாட்களில் தக்காளியின் விளைச்சல் மற்றும் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது பூண்டாகும், பூண்டின் விலையானது தற்போது கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டின் விலையானது 350 முதல் 450 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மேலும் பூண்டு சீசன் இல்லாததால் ஈரோட்டில் பூண்டு விலை தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு நாட்டு பூண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்தும், மலைப்பூண்டு இமாச்சல பிரதேசத்தில் இருந்தும் வருகிறது. இந்தநிலையில் புதிய பூண்டு போதிய மகசூல் இல்லாத காரணத்தில் பூண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Garlic
பூண்டு விலை எப்போது குறையும்
தற்போதுதான் ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநில வியாபாரிகள் விதைப்பூண்டை வாங்கி சென்றுள்ளனர். எனவே ஜனவரி மாதத்தில் தான் பூண்டு வரத்து அதிகரிக்கும். அப்போது தான் விற்பனை விலையானது குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி விலை என்ன.?
இதேபோல குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கு முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் பொடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது