ஜனவரி 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் 6 நாட்கள் லீவு!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜனவரி 13ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Chidambaram Nataraja Temple
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜனவரி 12ம் தேதி தேரோட்டமும், 13ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
Local Holiday
அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தருவார்கள். ஆகையால் அன்றைய தினம் கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜாக்பாட்! பொங்கல் முந்தைய நாளும் லீவு! பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை!
School Holiday
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் திருவிழா ஜனவரி 13ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.
Government Employee
அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு வழக்கம்போல இயங்கும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 01-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் விடுமுறை! இந்த மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்கள் லீவு?
School Leave
ஏற்கனவே ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Pongal Holiday
ஏற்கனவே ஜனவரி 14 செவ்வாய்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இடையில் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் , கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13ம் தேதியன்று ஆருத்ரா தரிசனம் திருவிழா முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு குஷியில் துள்ளி குத்திக்கின்றனர்.