MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! ஏ1 குற்றவாளி பிரபல தாதா நாகேந்திரன் ஐசியூவில்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! ஏ1 குற்றவாளி பிரபல தாதா நாகேந்திரன் ஐசியூவில்!

Rowdy Nagendran Admitted in Hospital: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாதா நாகேந்திரன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்போது, முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை.

1 Min read
Author : vinoth kumar
Published : Oct 03 2025, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்க பழியாக நடந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது
Image Credit : our own

ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடி திரு​வேங்​கடம் என்​பவர் போலீ​சா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார். மேலும் சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Articles

Related image1
அக்கா அக்கானு சொல்லியே பக்கவாக ஓனரின் மனைவிக்கு ரூட் போட்டு மிக்ஸ் ஆன மிக்சர் மாஸ்டர்! இறுதியில் அதிர்ச்சி!
Related image2
உங்களுக்கு யார் இந்த ரைட்ஸ் கொடுத்தது! அமுதா ஐஏஎஸ் அதிகாரியை சும்மா விடமாட்டேன்! ருத்தரதாண்டவம் ஆடிய இபிஎஸ்
34
ஆம்ஸ்ட்ராங் கொலை சிபிஐக்கு மாற்றம்
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் கொலை சிபிஐக்கு மாற்றம்

இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​சார் 5000 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கை போலீ​சார் முறை​யாக விசா​ரிக்​கவில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

44
நாகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை
Image Credit : our own

நாகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை

இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக உள்ள பிரபல தாதா நாகேந்திரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் பாதிப்பால் நாகேந்திரனின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
சென்னை
அரசியல்
கொலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Related Stories
Recommended image1
அக்கா அக்கானு சொல்லியே பக்கவாக ஓனரின் மனைவிக்கு ரூட் போட்டு மிக்ஸ் ஆன மிக்சர் மாஸ்டர்! இறுதியில் அதிர்ச்சி!
Recommended image2
உங்களுக்கு யார் இந்த ரைட்ஸ் கொடுத்தது! அமுதா ஐஏஎஸ் அதிகாரியை சும்மா விடமாட்டேன்! ருத்தரதாண்டவம் ஆடிய இபிஎஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved