MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை: இரு மாதங்களில் 5 பேர் பலி- அச்சத்தில் பெற்றோர்கள்

நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை: இரு மாதங்களில் 5 பேர் பலி- அச்சத்தில் பெற்றோர்கள்

நீட் தேர்வு இன்று தொடங்கும் நிலையில் தேர்வுக்கு அஞ்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 2017 முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து, தேர்வுக்கு முன்னும் பின்னும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : May 04 2025, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

நீட் தேர்வு இன்று தொடங்கும் நிலையில் தேர்வுக்கு அஞ்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடராக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில்,

அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி  கயல்விழியை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை

அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை

2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும்,  நீட் தேர்வு  முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன.  இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி,    மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி,  ஏப்ரல் 3-ஆம் தேதி  எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா,   ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி,  இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5  மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

35
மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு

மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு

நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும்  தடுக்க முடியாது. நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக,  புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது;

45
மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை

மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை. நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது  குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன.  இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

55
நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு  தீர்வு தற்கொலை அல்ல

நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு  தீர்வு தற்கொலை அல்ல

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக,  நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு  தீர்வு  தற்கொலை அல்ல என்பதை  மாணவச் செல்வங்கள்  புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அன்புமணி தெரிவித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
நீட் தேர்வு
நீட்
மருத்துவக் கல்லூரிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
நீட் தேர்விற்கு தயாரா.? மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு- என்னென்ன தெரியுமா.?
Recommended image2
NEET UG 2025 ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி? முழுவிபரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved