MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வேலைவாய்ப்பு.! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

10 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வேலைவாய்ப்பு.! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

Job in Tamil Nadu: தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி 10ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 05 2024, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
job opportunities

job opportunities

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரியில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து வேலை தேடி அலைகின்றனர். அப்படி வெளி உலகத்திற்கு வருபவர்கள் அரசு பணியை குறியாக வைத்து வேலை தேடுவார்கள். அவர்களுக்காக அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகிறது.

மேலும் 2026ஆம் ஆண்டு ஜனவரிக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது. மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்கும் அதற்கு தேவையான பயிற்சி மற்றும் கடனுதவிக்கான வழிகாட்டியும் வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Job in Tamil Nadu

Job in Tamil Nadu

தமிழகத்தில் தனியார் தொழிற்சாலைகள்

மேலும் தமிழத்தில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு தொழிற்சாலைகளை தொடங்கி வருகிறது. அந்த வகையில் லட்சக்கணக்கானோருக்கு வேலைக்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதன் படி பல தனியார் நிறுவனங்கள் தமிழக அரசின் ஒத்துழைப்போடு பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அத்ன படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

35
Job Fair in Dindigul

Job Fair in Dindigul

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 07.12.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3.00 மணி வரை எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் தகுதிக்குட்பட்டு வழங்கப்படும் எனவும் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
Education Qualification

Education Qualification

கல்வி தகுதிகள் என்ன.?

மேலும் மத்திய மற்றும் மாநில அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் உள்ளிட்ட படிப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுக்கு அதற்கான ஆணைகளை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் சக்கரபாணி வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

55
Job in Dindigul

Job in Dindigul

கூடுதல் விவரங்களுக்கு

வேலை வாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  உதவி இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல்.
0451-2904065, தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
வேலை வாய்ப்பு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved