MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உண்மையான 'அயன்' மேனாக மாறுவதே என் முழு டார்கெட்.. அடித்து கூறும் அண்ணாமலை

உண்மையான 'அயன்' மேனாக மாறுவதே என் முழு டார்கெட்.. அடித்து கூறும் அண்ணாமலை

கோவைக்கு வருகிற 19 ஆம் தேதி வருவதை உறுதி செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Nov 14 2025, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
19ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி
Image Credit : X/ K Annamalai

19ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விவசாயத்துக்கான ஒரு அதிகாரி இருப்பார். ஆனால் அவர் தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை. தமிழக அரசு விவசாயத்திற்கு உரிய முன்னுரிமை அளிப்பதில்லை. பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி கோவை வருகிறார். தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். பிரதமர் விவசாயத்திற்காக பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது” என்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நாட்டில் தீவிரவாதிகள் உற்பத்தியாகக் கூடாது
Image Credit : Asianet News

நாட்டில் தீவிரவாதிகள் உற்பத்தியாகக் கூடாது

மேலும் “நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது. அது எந்த மதத்துடனும் சம்பந்தப்படாத ஒன்று. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகம் உள்ளது. சரியான அதிகாரிகளை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மதத்தின் பெயரில் தீவிரவாதம் நடக்கக் கூடாது; மதத் தலைவர்கள் அதைப் பற்றி திறந்தவெளியில் பேச வேண்டும், ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும்.

35
முதல்வர் காவல்துறையை சிறப்பாக கையாளவில்லை..
Image Credit : X/Annamalai

முதல்வர் காவல்துறையை சிறப்பாக கையாளவில்லை..

சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாகக் கையாளவில்லை. காவல்துறை கோட்டை விட்டுள்ளது. கோவை கல்லூரி மாணவி சம்பவத்தையும் இதன் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கலாம். முதலமைச்சர் காவல்துறையை இன்னும் சிறப்பாக கையாள வேண்டும்.

45
NAD வெற்றி உறுதி
Image Credit : google

NAD வெற்றி உறுதி

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முக்கிய நபர் தான். ஆனால் என்.டி.ஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். வாக்காளர் பட்டியலில் குழப்பம் இருப்பதை மறுக்க முடியாது. அதிகாரிகள் அதை சரி செய்ய வேண்டும். யாருக்கும் பயம் தேவையில்லை; அது BLO வின் பொறுப்பு. தமிழகத்தில் 5 கோடிக்கும் மேல் பூர்த்தி செய்யப்பட்ட பார்ம்கள் தேர்தல் ஆணையத்திடம் வந்துள்ளதாகத் தகவல் உள்ளது.

55
அயன்மேனாக மாறுவதே இலக்கு
Image Credit : our own

அயன்மேனாக மாறுவதே இலக்கு

தமிழ்நாடு விளையாட்டில் சிறந்த மாநிலம். ‘அயன்மேன்’ போட்டியை தமிழகத்திலும் நடத்த வேண்டும். முழுமையான அயன்மேனாக மாறுவது எனது இலக்கு.

“இன்னும் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. டிசம்பர், ஜனவரியில் கூட்டணி விவரம் தெரியும். அரசியல் ஆட்டத்தில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதே நோக்கம்,” என்றார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணாமலை பாஜக
பிஜேபி
நரேந்திர மோடி
திமுக
மு. க. ஸ்டாலின்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Recommended image2
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image3
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Related Stories
Recommended image1
போலி வாக்காளர்களை வைத்துதான் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா..? ஆதாரங்களை அடுக்கும் நிர்மலா சீதாராமன்..!
Recommended image2
கூட்டணி கட்சியினரின் நலனுக்காக.. திமுக அரசின் பேராசையால் அவதிப்படும் தமிழக பயணிகள்.. அண்ணாமலை சாடல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved