பாஜகவில் தேசிய தலைவர் பதவி.? அண்ணாமலைக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் நயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவின் தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bharatiya Janata Yuva Morcha President Annamalai : நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த இலக்காக தென் மாநிலங்களில் பாஜக கால் பதிக்க திட்டமிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க காய் நகர்த்தி வருகிறது.
இதன்படி தமிழகத்தில் பாஜக மாநில தலைவர்களை நியமித்தும் அதிரடி அரசியலிலும் மேற்கொண்டது. அதன்படி தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன், அண்ணாமலை என அடுத்தடுத்து தலைவர்களை நியமித்து தமிழகத்தில் கிராமப்புறங்களில் பாஜகவை கொண்டு சேர்த்தது.
Tamilnadu bjp
அண்ணாமலையும் தமிழக அரசியலும்
இதில் அண்ணாமலையில் பங்கு மிகவும் முக்கியமானது அண்ணாமலையின் அதிரடி அரசியல் காரணமாக தமிழகத்தில் எதிர் கட்சி அதிமுகவா.? பாஜகவா? என்ற கேள்வி எழும் நிலையை உருவாக்கினார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பிலும் தமிழக முழுவதும் நடைபயணமும் அண்ணாமலை மேற்கொண்டார். இதனால் பட்டி தொட்டி எங்கும் பாஜகவிற்கு வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனி அணியாக களம் இறங்கிய பாஜக 10 சதவீத வாக்குகளுக்கு மேல் கைப்பற்றி அசத்தியது.
Admk Bjp alliance
அதிமுக- பாஜக கூட்டணி
இதற்கு அண்ணாமலையின் செயல்பாடு முக்கியமாக காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கணிசமான எம்எல்ஏக்களை பெற அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தேசிய தலைமை திட்டமிட்டது. ஆனால் தமிழகத்தில் அதிமுக தலைவர்களுக்கும் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலைக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருவதால் அதிமுகவுடன் அனுசரித்து போகின்ற ஒரு தலைவரை மாநில தலைவராக நியமிக்க தேசிய தலைமை முடிவெடுத்தது. அதன்படி நெல்லை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Bharatiya Janata Yuva Morcha annamalai
அண்ணாமலைக்கு தேசிய தலைவர் பதவி
அதே நேரம் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளாக இருந்த தமிழிசை, சரத்குமார், கரு நாகராஜன் ஆகியரோடு அண்ணாமலைக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இருந்த போதும் இந்த பொறுப்பை விட தேசிய தலைவர் பதவி அதாவது கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பிஜேஒய்எம்) தேசிய தலைவராக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அமித்ஷா, ஜிபி நட்டா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.