எடப்பாடி தொகுதியில் களம் காணும் இபிஎஸ்..! அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சமாக 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுக 178 தொகுதிகளில் களம் காண்கின்றது.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
இதனிடையே அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முகூர்த்த தினம், நல்ல நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள 23 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், கடம்பூர் ராஜூ கோவில்பட்டி, சி.வி.சண்முகம் மயிலம், தங்கமணி – குமாரபாளையம், மணியன் – வேதாரண்யம், வேலுமணி – தொண்டாமுத்தூர், கே.பி.முனுசாமி – வேப்பனஹல்லி, விஸ்வநாதன் – நத்தம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட வேட்பாளர்கள்..
மேலும் சீனிவாசன் – திண்டுக்கல், விஜயபாஸ்கர் – விராலிமலை, உதயகுமார் – திருமங்கலம், ராஜேந்திர பாலாஜி – சிவகாசி, ஜெயக்குமார் – ராயபுரம், செல்லூர் ராஜூ – மதுரை (மேற்கு), ஆர்.காமராஜ் – நன்னிலம், சி.விஜயபாஸ்கர் – விராலிமலை, அன்பழகன் – பாலக்கோடு, அரியலூர் – தாமரை ராஜேந்திரன், கரூர் – MR விஜயபாஸ்கர், பவானி – KC கருப்பணன், திருப்பரங்குன்றம் – ராஜன் செல்லப்பா, கலசபாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மதுரவாயல் – பென்ஜமின் ஆகிய 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

