MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நடு ரோட்டில் மீட்டிங்: நோயாளியை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸை விரட்டி அடித்த அதிமுகவினர்

நடு ரோட்டில் மீட்டிங்: நோயாளியை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸை விரட்டி அடித்த அதிமுகவினர்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பிரதான சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ்ஐ அதிமுக தொண்டர்கள் தாக்கி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு.

2 Min read
Author : Velmurugan s
Published : Aug 25 2025, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம்
Image Credit : X/@EPSTamilNadu

எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் பிற கட்சிகளுக்கு முன்னதாகவே கூட்டணியை உறுதி செய்து சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார்.

24
துறையூர் பிரதான சாலையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்
Image Credit : Asianet News

துறையூர் பிரதான சாலையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்

அந்த வகையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் பிரசாரத்தை முடித்துக் கொண்டு துறையூர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அப்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தார். பழிசாமியின் வருகையை முன்னிட்டு துறையூர் பேருந்துநிலையம் அருகே பிரதான சாலையில் அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

Related Articles

Related image1
இது ஒண்ணும் தொடைநடுங்கி EPS ஆட்சி அல்ல! பாஜக –அதிமுக கூட்டணிக்கு உதயநிதி சமாதி கட்டுவார்! அமித்ஷாவியே அலறவிடும் A.ராசா!
Related image2
ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா! பெர்பாமன்ஸ் செய்தபோது குறுக்கே வந்த ஆம்புலன்ஸால் டென்ஷனான எடப்பாடி
34
ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்
Image Credit : Getty

ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்

இந்நிலையில் ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. பழனிசாமி பிரசார இடத்திற்கு வந்து சேராத நிலையில், அதற்கு முன்னதாக அப்பகுதியை கடந்துவிடலாம் என்ற எண்ணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கூட்டத்திற்காக கூடியிருந்த அதிமுக தொண்டர்களுக்கு மத்தியில் வாகனத்தை இயக்கி உள்ளார். அப்போது ஆம்புலன்ஸ்ஐ சூழ்ந்துகொண்ட அதிமுக தொண்டர்கள் வாகனத்தில் நோயாளி இல்லாத காரணத்தால் வாகனம் தொடர்ந்து முன்னோக்கி செல்லாதவாறு தாக்குதல் நடத்தினர்.

தலைவர்கள் போல எப்படி நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்பதற்கு உதாரணம் திமுக தலைவர்கள் #anna#kalainear#MKStalin#UdhayanidhiStalin 

தற்குறிகள் போல எப்படி நடந்து கொள்ளக் கூடாது, பேசக்கூடாது என்பதற்கு உதாரணம் டெட் பாடி பழனிச்சாமி #EdappadiPalaniswami 

தன்னுடைய இருப்பைக்… pic.twitter.com/LwgEX8okhJ

— PAMMAL DINESH (@GSTDINESH4) August 24, 2025

44
ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பகிரங்க மிரட்டல்!
Image Credit : X/@EPSTamilNadu

ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பகிரங்க மிரட்டல்!

மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கர்ப்பிணியாக இருந்த செவிலியர் மீதும் அதிமுக.வினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

எச்சரித்த எடப்பாடியார்!

நோயாளிகளே இல்லாத ஆம்புலன்ஸை வேண்டும் என்றே எழுச்சிப் பயணத்தின் குறுக்கே அனுப்புகிறார்கள், அடுத்த முறை இதுபோல் நடந்தால் ஆளில்லாத ஆம்புலன்ஸ் ஆட்களை ஏற்றிச் செல்லும்
-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி#Edappadipalaniswami | #Tiruvannamalai | #admk… pic.twitter.com/aPzqIOuP79

— Naalai Namadhe (@NaalaiNamadheTN) August 18, 2025

முன்னதாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தனது கூட்டத்தின் நடுவே அடிக்கடி ஆம்புலன்ஸ் வருகிறது. இனி அப்படி ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ்ஐ ஓட்டி வரும் ஓட்டுநர் நோயாளியாக்கப்பட்டு அதே ஆம்புலன்ஸ்ல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அதனை தற்போது அக்கட்சி தொண்டர்கள் செயல்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக பாஜக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Related Stories
Recommended image1
இது ஒண்ணும் தொடைநடுங்கி EPS ஆட்சி அல்ல! பாஜக –அதிமுக கூட்டணிக்கு உதயநிதி சமாதி கட்டுவார்! அமித்ஷாவியே அலறவிடும் A.ராசா!
Recommended image2
ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா! பெர்பாமன்ஸ் செய்தபோது குறுக்கே வந்த ஆம்புலன்ஸால் டென்ஷனான எடப்பாடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved