- Home
- Tamil Nadu News
- இபிஎஸ் கையில் எடுத்த நீட் போராட்டம்.! மெழுகுவர்த்தி ஏந்தி களத்தில் இறங்கிய அதிமுக
இபிஎஸ் கையில் எடுத்த நீட் போராட்டம்.! மெழுகுவர்த்தி ஏந்தி களத்தில் இறங்கிய அதிமுக
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக மாணவர் அணி மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தியது. நீட் தேர்வு ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

ADMK candlelight protest : நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து தங்களது உயிரை இழந்து வரும் நிலையில், நீட் தேர்வு ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும் மேடைதோறும் பொய் வாக்குறுதி அளித்து மக்களின் வாக்குக்களை பெற்று வெற்றி பெற்றனர்.
ADMK NEET exam protest
மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி
ஆனால் 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ் நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக, அதிமுக மாணவர் அணியின் சார்பில் (19.4.2025) இன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் அதிமுக மாணவர் அணி சார்பாக இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ADMK candlelight protest
திமுகவிற்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக
அந்த வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அருகே அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார். நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாகக் போய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாக குறிப்பிட்டும் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. அந்த வகையில்
என்னாச்சு என்னாச்சி நீட் ரகசியம் என்னாச்சி- ஓடிப் போச்சி ஒட்டிப் போச்சி நான்கு ஆண்டுகள் ஓடிபோச்சி
NEET cancellation
திமுகவிற்கு எதிராக சீறிய அதிமுக
என்னாச்சி என்னாச்சி ஒருகோடி கையெழுத்து நாடகம் என்னாச்சி
ஒப்புக்கொள் ஒப்புக்கொள் தோல்வியை ஒப்புக்கொள்- பதவி விலகு பதவி விலகு உதயநிதியே ஸ்டாலின் அரசே பதிவு விலகு என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதே போல தமிழகத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் திமுகவிற்கு எதிரான போரட்டத்தில் கலந்து கொண்டு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.