MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே

பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தாம்பரம் - கன்னியாகுமரி, சென்னை - கொச்சுவேலி, கன்னியாகுமரி - கயா வழித்தாங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Dec 22 2024, 07:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Train Ticket Cancelling

Train Ticket Cancelling

விஷேச நாட்கள்- சிறப்பு ரயில்

ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்கள் படிப்பை முடித்து வேலை தேடி வருகிறார்கள். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளியூருக்கு வேலை தேடி வருபவர்களுக்கு சென்னையானது இருக்க இடமும் கொடுத்து, பிழைக்க வழியும் தேடி கொடுக்கிறது.  அந்த வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு வந்தவர்கள்  தொடர் விடுமுறை, விஷேச நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு உறவினர்களை பார்க்க  பல லட்சம் பேர் சென்னையில் இருந்து மட்டுமே செல்வார்கள். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
new year special train

new year special train

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து வருகிற 24ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதையொட்டி சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இதன் படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி  தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.  ரயில் எண 06039 / 06040  தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும். கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டிசம்பர் 24 மற்றும் 31ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில் இயக்கப்படுகிறது.

35
train reservation

train reservation

தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்

இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும்  சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1ஆம் தேதியில் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயிலில் இரண்டு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளும், 4 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியும்,  10 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயிலானது தாம்பரம் இருந்து புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்று சேருகிறது.

45
special train

special train

சிறப்பு ரயில் அறிவிப்பு

இதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து (ரயில்எண் 06005 / 06006) கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 23ஆம் தேதியும் 30ஆம் தேதி இயக்கப்படுகிறது இதே போல மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், சேலம், ஈரோடு, திருச்சூர், கோட்டயம் வழியாக கொச்சுவேலி சென்று சேர்கிறது

55
Train

Train

கும்பமேளா சிறப்பு ரயில்

அடுத்ததாக கும்பமேளாவையொட்டி கன்னியாகுமரியில் இருந்து கயா விற்கும் சிறப்புரயில் இயக்கப்படுகிறது.  கன்னியாகுமரியில் இருந்து கயாவிற்கு ஜனவரி 6 மற்றும் 20 ஆம் தேதிகளிலும் மறுமார்க்கத்தில் ஜனவரி 9 மற்றும் 23ஆம் தேதிகளில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
ரயில்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(17.0 ov)104/1
IND need 39 runs in 90 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?
Recommended image3
Now Playing
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved