School Leave : கொட்டித்தீர்க்கும் மழை.! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம் தெரியுமா.?
நீலகிரி மாவட்டத்தில் மழையானது கடந்த ஒரு வாரமாக வெளுத்து வாங்கி வரும் நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு, தண்ணீர் தேங்கியும் காணப்படுகிறது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Rain school leave
கொட்டும் மழை
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் படி இரவு நேரங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
heavy rain
இடி மின்னலோடு மழை
தமிழகத்தில் ஒரிரு இடங்களில் 23 முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° - 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு
இதனிடையே கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவசர கால உதவிக்காக தொலைபேசி எண்களையும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
heavy rain
3 தாலுக்கா பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தநிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னூர், குந்தா ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.