- Home
- Tamil Nadu News
- விஜய் பரப்புரை செய்த கரூரில் உச்சக்கட்ட பதற்றம்! உயிரிழப்பு கிடுகிடுவென உயர்வு! தவெகவினர் மீது தடியடி!
விஜய் பரப்புரை செய்த கரூரில் உச்சக்கட்ட பதற்றம்! உயிரிழப்பு கிடுகிடுவென உயர்வு! தவெகவினர் மீது தடியடி!
TVK Vijay Campaign: தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பிரச்சாரத்தை நிறைவு செய்த விஜய் இன்று நாமக்கலில் கே.எஸ்.திரையரங்கம் முன்பு பிரச்சாரத்தில் முடித்துக் கொண்டு கரூரில் வேலுசாமிபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திருச்சியை மிஞ்சும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் கட்சித் தொண்டர்கள் பலரும் குழந்தைகளும் அடுத்தத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவசரமாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உதவ தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன, மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் காலணிகள் சிதறி கிடந்துள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.