MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இத்தனை நாள் லீவா?

பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இத்தனை நாள் லீவா?

2025-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாகவும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு 6 நாட்கள் மற்றும் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 27 2024, 08:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu Government

Tamilnadu Government

2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் 2025-ம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ரொம்ப ஆர்வமாக இருந்து வந்தனர். இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான முக்கிய பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை குறித்து மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசும் பட்டியலை வெளியிட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
School Holiday

School Holiday

அதில், 2025ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாகவும்,  அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 பொது விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமையும், இரண்டு பொது விடுமுறை சனிக்கிழமையும் வருகிறது. அதுமட்டுமல்லாமல் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன. ஒரு மாதத்தில் ஒரு நாள் அரசு விடுமுறை கிடையாது உள்ளிட்டவைகள் பள்ளி மாணவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

35
2025 Pongal School Holiday

2025 Pongal School Holiday

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 14,15,16  ஆகிய 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது சனி, ஞாயிறு விடுமுறை வந்து விடுகிறது. இடையில் ஜனவரி 13 திங்கள் போகி பண்டிகை வருகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கும் பட்சத்தில்  பொங்கல் பண்டிகையை சேர்த்து மொத்தம் 6 நாள் விடுமுறை கிடைக்கும். 

இதையும் படிங்க: Pongal Holidays: பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! பொங்கலுக்கு 9 நாள் விடுமுறை? அடிக்கப்போகுது ஜாக்பாட்!

45
2025 Diwali Festivel

2025 Diwali Festivel

இந்நிலையில் தீபாவளி  பண்டிகைக்கு எத்தனை நாள் விடுமுறை என்பதை பார்ப்போம். அதாவது கடந்த தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தை போல அடுத்த ஆண்டு அதாவது 2025 தீபாவளி பண்டிகைக்கு பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

55
Diwali School Holiday

Diwali School Holiday

அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. இதற்கு முந்தைய நாள் சனி, ஞாயிறு விடுமுறையாகி விடுகிறது. தீபாவளிக்கு மறுநாள் இந்த முறை அரசு பொது விடுமுறை அறிவித்ததை போன்று அக்டோபர் 21ம் செவ்வாய்கிழமை அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு 4 நாட்கள் முறை கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் பள்ளி மாணவர்களுக்கு இப்போதே குஷியில் துள்ளி குதிக்கின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தீபாவளி விடுமுறை
பள்ளி மாணவர்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TASMAC Shop: டாஸ்மாக் மூடலை தொடர்ந்து! முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி! இனி ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது!
Recommended image2
Sasikala In Admk: மீண்டும் ஆளுமையை நிரூபிக்கும் சசிகலா.! சின்னம்மா பக்கம் சாயும் அதிமுக.! வனவாசம் முடிந்தது என கொக்கரிக்கும் தொண்டர்கள்.!
Recommended image3
Advocate General Vijay Narayan: தமிழகத்தின் புதிய அரசு தலைமை வழக்கறிஞர் நியமனம்! யார் இந்த விஜய் நாராயண்? விஜய்யின் வழக்கிலும் வாதாடியவர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved