MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Pongal Holidays: பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! பொங்கலுக்கு 9 நாள் விடுமுறை? அடிக்கப்போகுது ஜாக்பாட்!

Pongal Holidays: பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! பொங்கலுக்கு 9 நாள் விடுமுறை? அடிக்கப்போகுது ஜாக்பாட்!

2025ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் குடியரசு தினம், தெலுங்கு வருட பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய மூன்று விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமையிலும், பக்ரீத், கிருஷ்ணர் ஜெயந்தி 2 விடுமுறைகள் சனிக்கிழமையும் வருகிறது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 24 2024, 07:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Tamilnadu Government

Tamilnadu Government

ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதற்கு முன்னதாக அந்த ஆண்டில் வரும் விடுமுறை தினங்கள் முக்கிய பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை குறித்து மத்திய அரசை தொடர்ந்து  தமிழக அரசும் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 2025ம் ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  

27
Government Employee

Government Employee

அரசு பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்படும். இது, மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தும். 2025ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

37
Sunday Government Holiday

Sunday Government Holiday

இந்த பொது விடுமுறை நாட்களில் குடியரசு தினம், தெலுங்கு வருட பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய மூன்று விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமையிலும், பக்ரீத், கிருஷ்ணர் ஜெயந்தி 2 விடுமுறைகள் சனிக்கிழமையும் வருகிறது. 

47
Pongal Festival

Pongal Festival

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14 செவ்வாக்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் வருகிறது. அரசு மனசு வைத்தால் அரசு ஊழியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் 9 நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

57
Pongal Holiday

Pongal Holiday

அதாவது பொங்கல் முந்தைய நாள் போகி பண்டிகை ஜனவரி 13ம் தேதி வருகிறது.  அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது. ஜனவரி 11, 12ம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறையாகி விடுகிறது. இடையில் ஜனவரி 17  வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை வந்துவிடும். அப்படி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. 

67
School Student

School Student

 அப்படி விடுமுறை அளிக்காத பட்சத்தில் போகி பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அறிவித்தால் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும் 

77
Holidays

Holidays

மேலும், நடப்பு 2024ம் ஆண்டை விட 2025ல் விடுமுறை நாட்களில் ஒரு நாள் குறைவு. ஏனெனில், காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி ஒரே நாளில் வருவதால் விடுமுறை எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பொங்கல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved