- Home
- Tamil Nadu News
- அரசு பணிக்கு காத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு அறிவித்த அதிரடி முடிவு
அரசு பணிக்கு காத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு அறிவித்த அதிரடி முடிவு
தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனங்களில் 20% பணியிடங்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இதர மொழிகளில் பயின்று தமிழில் தேர்வு எழுதியவர்கள், தனித்தேர்வர்கள் தகுதியற்றவர்கள். தமிழ் ஆசிரியர் பணிக்கு தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்.

Tamil Nadu government jobs : அரசு பணியை குறிக்கோளாக வைத்து லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக படித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் மொழி தெரியாதவர்கள் அரசு பணியில் இணைவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பணியில் இணைய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, தமிழ்நாடு அரசு பணிநியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழியில் கல்வி படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil medium education
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாற்றி அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன் படி இதர மொழிகளை பயிற்று மொழியாக படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லாமல், நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் இல்லையென கூறப்பட்டுள்ளது.
Tamil Nadu government jobs
புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் எனவும், தமிழ் பாடத்திலும் மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Job vacancy
அரசு பணியில் 20 சதவீத முன்னுரிமை
கல்வித் தகுதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தேர்வு முகமைகள், பணி நியமன அலுவலர்கள் உறுதி செய் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்துக்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும்(முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 வகையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.