20 மாவட்டங்களில் புரட்டிப்போட்ட கன மழை.! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
இன்று உருவாகிறது புயல்
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில்,
tamilnadu rain
டெல்டா முதல் சென்னை வரை கன மழை
கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் சின்னம் நாகையில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
tamilnadu rain
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தற்போது புயல் சின்னம் தமிழக கடற்கரையோரங்களை நோக்கி நகரும் நிலையில் மழையானது தீவிரம் அடைந்துள்ளது. அதன் படி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. ஒரு சில நேரங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் பெருங்குடி, பல்லாவரம், வேளச்சேரி பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாக ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழையானது கொட்டியது. இந்தநிலையில் புயல் சின்னம் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர்,உள்பட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் இலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி மற்றுக் கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
rain- school
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
திருவள்ளூர்,விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர்