MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 108 அம்மன் கோயில் தரிசனம்.! ஏசி பேருந்து பயண கட்டணம் இவ்வளவு தானா.? சுற்றுலா துறை சூப்பர் திட்டம்

108 அம்மன் கோயில் தரிசனம்.! ஏசி பேருந்து பயண கட்டணம் இவ்வளவு தானா.? சுற்றுலா துறை சூப்பர் திட்டம்

தமிழக சுற்றுலாத்துறை, கோயில்கள், மலைகள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க 8 நாள் சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 2 மற்றும் 3 நாட்கள் நவகிரக சுற்றுலா, 4 நாட்கள் அறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா மற்றும் 108 அம்மன் கோயில்கள் சுற்றுலா போன்ற பல்வேறு சுற்றுலாத் திட்டங்களும் உள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 27 2024, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழகமும் கோயிலும்

தமிழகம் ஆன்மீக தளமாகவே பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு கோயில்கள் நிறைந்து காணப்படுகிறது. சென்னையில் தொடங்கி ராமேஸ்வரம் வரை பல கோயில்கள் உள்ளது. குறிப்பாக சென்னையில் பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் கோயில், மதுரை  மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி ஶ்ரீரங்கம் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி முருகன் கோயில், தஞ்சை பெரிய கோயில் என ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளது. அந்த வகையில் தமிழக கோயிங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் பல்வேறு சுற்றுலாவை தமிழக அரசின் சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கோயில்களுக்கு சுற்றுலா

அதன் படி, தமிழகம் முழுவதும் கோயில்கள், மலைப்பகுதிகள், தேவாலயம், மசூதி என பல இடங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் 8நாள் தமிழக சுற்றுலாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 2 மற்றும்  3  நாட்கள் சுற்றி பார்க்கும் வகையில் நவகிரக சுற்றுலா,  நான்கு நாட்கள் அறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா, ஒரு நாள் முருகன் கோயில் சுற்றுலா, மற்றும் 4 நாட்கள் அறுபடை வீடு உள்ளிட்ட பல்வேறு  சுற்றுலாவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.  
 

34
Meenakshi Amman

Meenakshi Amman

108 அம்மன் கோயில் சுற்றுலா

இது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள 108 அம்மன் கோயில்களை தரிசிக்கும் வகையில் சுற்றுலாவும் நீண்ட காலமாக செயல்படுத்தப்படுகிறது.  இந்த சுற்றுலாவானது சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால்.  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, விழுப்புரம் என அந்த பகுதியில் உள்ள 108 அம்மன் கோவிலில் தரிசிக்கும் வகையில் இந்த சுற்றுலாவானது அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் இந்த சுற்றுலாவிற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆன்மிகத்தில் அதிகம் நாட்டமுள்ள மக்கள் இந்த சுற்றுலாவை அதிக அளவில் பயன்படுத்து வருகின்றனர்.  

44

சுற்றுலா கட்டணம் எவ்வளவு.?

இந்த சுற்றுலா, ஒவ்வொரு வாரமும், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், சென்னையில் இருந்து புறப்பட்டு, ஐந்தாம் நாள் இரவு, சென்னை வந்தடையும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலில் தங்கவைக்கப்படுவார்கள் . இந்த சுற்றுலாவிற்கு கட்டணமாக ஒரு நபருக்கு 11,250 வசூலிக்கப்படுகிறது.  மேலும் விபரங்களுக்கு, 2533 3444, 2533 3333, 2533 3286 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  www.ttdconline.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
கோவில்
பயணம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved