- Home
- Tamil Nadu News
- ஞானசேகரனிடம் 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல்! பெண்களுடன் உல்லாச வாழ்க்கை! அடுத்தடுத்து வெளிவரும் பகீர்!
ஞானசேகரனிடம் 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல்! பெண்களுடன் உல்லாச வாழ்க்கை! அடுத்தடுத்து வெளிவரும் பகீர்!
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திருட்டு வழக்குகளிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ஞானசேகரனிடம் 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல்! பெண்களுடன் உல்லாச வாழ்க்கை! அடுத்தடுத்து வெளிவரும் பகீர்!
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்யப்பட்டார்.
சிறப்பு புலனாய்வு குழு
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க அண்ணாநகர் துணை ஆணையர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
7 திருட்டு வழக்குகள்
இதனிடையே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள பெரிய வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்தாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கரணை போலீசார்
இந்த திருட்டு வழக்கில் ஞானசேகரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிக்கரணை போலீசாருக்கு ஆலந்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பேரில் ஞானசேகரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில்: பள்ளிக்கரணை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகள், சிசிடிவி கேமரா இல்லாத பகுதியில் உள்ள வீடுகளை குறித்து 7 வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
100 சவரன் தங்க நகைகள்
கொள்ளையடித்த நகைகளை விற்று அதில் வந்த பணத்தில் சொகுசு கார், பிரியாணி கடை மற்றும் பெண்களுடன் ஜாலியாக செலவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.