ஏழை, ஆதரவற்ற பெண்களுக்கு அரசு வழங்கும் அசத்தல் தொழில் வாய்ப்பு; 50 சதவீதம் மானியம்
விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்திற்கு ஆர்வமுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புத்தில் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் ஏழ்மை நிலை, கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழி குஞ்சுகள் வீதம்) 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
விழுப்புத்தில் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு
மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 100 பயனாளிகள் வீதம் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. கோழிகள் வளர்ப்பில் விருப்பமுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புத்தில் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு
பயனாளி சொந்த செலவில் 3, 200 ரூபாய் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பித்தவுடன் 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
விழுப்புத்தில் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு
மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உரிய ஆணவங்களுடன் ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.