- Home
- Tamil Nadu News
- திருநெல்வேலி
- ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு! Sadist அரசு! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு! Sadist அரசு! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
தமிழ்நாட்டு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு! Sadist அரசு! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான்.
நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் ஏராளமான மக்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இரண்டு மட்டுமே இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு
முன்பதிவில்லாத பெட்டிகளில் போதிய இடம் இல்லாததால் பொதுமக்கள் முன்பதிவு பெட்டிகளிலும், ஏசி வசதி கொண்ட பெட்டிகளிலும் ஏறி வருகின்றனர். கூட்ட நெரிசலால் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏற முடியாத ஆத்திரத்தில் பயணிகள் ரயிலின் ஏசி பெட்டிகளின் ஜன்னல்களை உடைக்கும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி இருந்தன. பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் குறைக்கப்பட்டு வருவதே இதற்கு காரணமாகும்.
இந்நிலையில், 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து ஏசி மூன்றடுக்கு பெட்டிகளை இணைக்க ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக கோவை, கேரளாவுக்கு செல்லும் ரயில்களில் முன்பதில்லாத பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியன் ரயில்வே
சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியன் ரயில்வே பல்வேறு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரித்தது. பெட்டிகள் அதிகரிக்கப்பட்ட சில மாதங்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட உள்ளன. இது பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏசி ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் வசதி படைத்த மக்களுக்காக சாதாண மக்களை இந்திய ரயில்வே புறம்தள்ளுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு'' என்று தெரிவித்துள்ளார்.
இப்படியே போச்சுனா! தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும்! பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!