- Home
- Tamil Nadu News
- கடலூர்
- அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து! தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறல்! பலர் படுகாயம்!
அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து! தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறல்! பலர் படுகாயம்!
சென்னையிலிருந்து மதுரை சென்ற 4 ஆம்னி பேருந்துகள் கடலூர் அருகே விபத்துக்குள்ளாகின. லாரி மீது மோதியதில் 45 பயணிகள் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை.

cuddalore
சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். ஆம்னி பேருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது.
cuddalore
அப்போது முன்னாள் சென்றுக்கொண்டிருந்த லாரியை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பின்னால் வந்த 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
cuddalore
அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதிய விபத்தில் 45 பேர் படுகாயமடைந்தனர். இந்து விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
chennai police
அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதிக் கொண்டதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.