MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • தமிழ்நாட்டில் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு! பயணிகள் ஷாக்!

தமிழ்நாட்டில் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு! பயணிகள் ஷாக்!

தமிழ்நாட்டில் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எந்தெந்த ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படுகிறது? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 31 2025, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Express Trains Sleeper Coaches Reduce
Image Credit : stockphoto

Tamilnadu Express Trains Sleeper Coaches Reduce

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான்.

24
ரயில்களில் அதிகரிக்கும் கூட்டம்
Image Credit : Social Media

ரயில்களில் அதிகரிக்கும் கூட்டம்

நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ரயில்களின் ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிகளவு மக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்து வரும் நிலையில், அண்மை காலமாக ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இதனால் ஏராளமான மக்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இரண்டு மட்டுமே இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

Related Articles

Related image1
மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும் 5 சலுகைகள்! இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
Related image2
சென்னை டூ டெல்லி 26 மணி நேரத்தில் போகலாம்! 6 மணி நேரம் மிச்சம்! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!
34
முக்கிய ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு
Image Credit : adobe stock

முக்கிய ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு

இந்நிலையில், தமிழ்நாட்டில் இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 2 ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் அடுத்த மாதம் முதல் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - திருநெல்வேலி, சென்னை - செங்கோட்டை

இதேபோல் சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை மேட்டுப்பாளையம் - நீலகிரி எக்ஸ்பிரஸ், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகளும், சென்னை - திருநெல்வேலி, சென்னை - செங்கோட்டை, நாகர்கோவில் - மும்பை, கன்னியாகுமரி புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

44
ரயில்வேயின் செயலால் பயணிகள் ஷாக்
Image Credit : Google

ரயில்வேயின் செயலால் பயணிகள் ஷாக்

முக்கியமான 9 ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே கோவை சென்னை, நெல்லை சென்னை, தென்காசி சென்னை ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதில்லை. இப்போது ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்தால் டிக்கெட் சுத்தமாக கிடைக்காது. 

பொதுவாக ஏழை, நடுத்தர மக்களே ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த பெட்டிகளை குறைத்து விட்டு பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யும் ஏசி பெட்டிகளுக்கு ரயில்வே முன்னுரிமை கொடுப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரயில்
இந்திய இரயில்வே
தென்னக இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Recommended image2
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image3
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Related Stories
Recommended image1
மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும் 5 சலுகைகள்! இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
Recommended image2
சென்னை டூ டெல்லி 26 மணி நேரத்தில் போகலாம்! 6 மணி நேரம் மிச்சம்! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved