சென்னை ஐஐடி மாணவருக்கு அடித்த யோகம்! 4.3 கோடி சம்பளத்தில் நியூயார்க்கில் வேலை!
குளோபல் டிரேடிங் நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் (Jane Street), சென்னை ஐஐடியில் (Madras IIT) 2025 பேட்ச் மாணவர்களில் இருந்து ஒரு மாணவருக்கு ரூ.4.3 கோடி வருடாந்திர சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
IIT Madras Placement
டெல்லி, பம்பாய், மெட்ராஸ், கான்பூர், ரூர்க்கி, காரக்பூர், கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு ஐஐடிகளில் கேம்பஸ் வேலை வாய்ப்புகள் தொடங்கியுள்ளன. இதில் ஒரு மாணவர் ரூ.4.3 கோடி ஆண்டுச் சம்பளத்துடன் வேலைக்குத் தேர்வாகி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
IIT Madras Student
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, குளோபல் டிரேடிங் நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் (Jane Street), சென்னை ஐஐடியில் 2025 பேட்ச் மாணவர்களில் இருந்து ஒரு மாணவருக்கு ரூ.4.3 கோடி வருடாந்திர சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. போனஸ் மற்றும் அமெரிக்காவிற்குச் செல்வதற்கான செலவுகளையும் இந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
Madras IIT Career
ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் எஞ்சினியரிங் மாணவருக்கு இந்த வேலை வாய்ப்பு பிபிஓ முறையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர் இதற்கு முன் இதே நிறுவனத்தில் பயிற்சி பெற்ற சிலரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஒரு டிரேடிங் நிறுவனமும் இந்த மாணவருக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Madras IIT job offer
2024-25 வேலை வாய்ப்பு அமர்வின் முதல் நாளில், IIT காரக்பூர் மாணவர்கள் 750 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். மென்பொருள், பகுப்பாய்வு, நிதி, வங்கி போன்ற துறைகள் அதிகபட்ச வேலைகளை வழங்கியுள்ளன. ஒன்பது மாணவர்கள் சர்வதேச நிறுவனங்களின் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், 11 மாணவர்களுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமான சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
IIT Madras 4.3 crore job
முதல் நாள் வேலை வாய்ப்பு அமர்வில் ஆப்பிள், கேபிடல் ஒன், டிஇ ஷா, க்ளீன், கூகுள், கிராவிடன், மைக்ரோசாப்ட், ஆப்டிவர், குவாண்ட்பாக்ஸ், டேட்டாபிரிக்ஸ், ஸ்கொயர்பாயிண்ட் கேபிடல், எபுலியண்ட் செக்யூரிட்டீஸ், சம்சாரா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.